இன்ஸ்டாகிராம், டிக் டாக் ஆப்ஸ் எல்லாம் வருவதற்கு முன், கவர்ச்சியாக போட்டோ ஷூட் பண்ணி, ஆல்பம் போட்டு, சினிமா கம்பெனிகளுக்கு, நடிகைகள் அனுப்புவது வழக்கம். ஆனால், இப்போதெல்லாம், ஆன் லைன்லதான் எல்லாமே நடக்கிறது. மறுபடியும் ஸ்லிம் ஆகிட்டேன் என்று நடிகை அனுஷ்கா போட்டோக்களை தட்டி விட்டிருந்தார். அடுத்தடுத்து, அவர் நடிக்க ஒப்புக் கொண்ட படங்களின் பட்டியல் வெளிவந்தது.
இந்த ரூட்டில் எல்லோருமே இறங்கியிருக்கிறார்கள் என்பதற்கு, தன்யா பாலகிருஷ்ணன் சமீபத்திய உதாரணம். ‘ஏழாம் அறிவு’, ‘ராஜாராணி’, ‘காதலில் சொதப்புவது எப்படி?’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
தெலுங்கு, கன்னட சினிமாக்களிலும் அவ்வப்போது தலைகாட்டும் தன்யா, ‘வாட்ஸ் ஆப் வேலைக்காரி’ என்ற வெப் சீரியலில் நடிக்கிறார். படங்களை விட, வெப் சீரிஸ்க்கு நடிகைகளின் தேவை அதிகமாக இருக்கிறது. படங்களைப் போல் அதற்கெல்லாம் சென்ஸார் கிடையாது. அப்படி இருப்பதால்தான், ஊரெல்லாம் வெப் சீரிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதை எதிர்பார்த்து செய்வது போல, கொஞ்சம் கிளாமரான போட்டோக்களை இப்போது, சமூக வலைதளம் மூலம் வெளியிட்டிருக்கிறார் தன்யா.