Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடம்

January 23, 2020
in News, Politics, World
0

காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,இயற்கை அனர்த்தத்தினால் இலங்கைக்கு வருடாந்தம் 50 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் இது மொத்த உற்பத்தியில் 0.4 சதவீதமாக அமைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் இந்தப் பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இயற்கை பேரழிவில் இருந்து எதிர்பாராத சுமை என்ற தலைப்பிலான அறிக்கையிலேயே உலக வங்கி இந்த விடயங்களைக் குறிப்பிட்டுள்ளது.

இயற்கை அனர்த்தத்தினால் வருடாந்தம் வீடுகள், உட்கட்டமைப்பு, விவசாயம் ஆகியவற்றுக்கு ஏற்படும் பாதிப்பு மற்றும் நிவாரணத்திற்காக 313 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பு ஏற்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுமார் 32 பில்லியன் ரூபாய் இழப்பு வெள்ளத்தினால் ஏற்படுகின்றது. கடும் காற்றின் காரணமாக 11 பில்லியன் ரூபாய் இழப்பும் வரட்சி மற்றும் மண் சரிவினால் 5.2 பில்லியன் ரூபாயும் சேதங்களுக்காக 1.8 பில்லியன் ரூபாயும் இழப்பு ஏற்படுகின்றது.

2017ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 213 பேர் உயிரிழந்துள்ளனர். 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

1.2 மில்லியன் ரூபாயை வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு அரசாங்கம் செலவிட்டுள்ளது. உலகிலேயே காலநிலை மாற்றத்தினால் மிக மோசமாகப் பாதிப்புக்குள்ளாகும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும்.

இந்த காலநிலை மாற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த காலநிலை மாற்றம் பாதுகாக்கப்பட்ட அரிசி தயாரிப்பையும் சீர் குலைக்கின்றது.

வரட்சியின் காரணமாக நாட்டின் மின்சார தேவையைச் சமாளிப்பதற்காக அனல்மின் உற்பத்தியை மேற்கொள்ளவேண்டியுள்ளது. இதற்காக 560 மில்லியன் டொலர்களை 2017ஆம் ஆண்டு அரசாங்கம் செலவிட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியின் 0.7 சதவீதமாகும் என குறிப்பிடபடுகிறது .

Previous Post

‘பின்க்’ ரீமேக்: முதல் நாளிலேயே பவன் கல்யாண் கோபம்

Next Post

வட மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதி உதவி

Next Post

வட மாகாணத்தில் கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு ஜப்பான் நிதி உதவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விஜயின் கருத்தால் யாழ் மக்களுக்காக கொதித்தெழுந்த தேரர்

பயிர்கடன் குறித்து முதல்வர் விடுத்த அதிரடி உத்தரவு

June 18, 2026
நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

நிதி முறைக்கேடு வழக்கில் பசில் ராஜபக்சவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

June 18, 2026
நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் பவிஷ் நாராயண் நடிக்கும் ‘லவ் ஓ லவ் ‘படத்தின் டீசர் வெளியீடு

June 18, 2026
மகிந்தவை குறிவைக்கவில்லை! அரசாங்க தரப்பு பகிரங்கம்

கோட்டாபய கைது : அமைச்சர் நலிந்த வெளியிட்ட அறிவிப்பு

June 18, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures