நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் படம், நேற்று உலகம் முழுவதும் வெளிவந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
ஆனால், சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பின் கொஞ்சம் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது. அதிலும், கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளி வந்தது. அப்படியிருந்தும், இப்படத்திற்கு, சுமார் 1.2 கோடி ரூபாய் வரை, இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், சூர்யாவின் என்.ஜி.கே., அங்கு 46 லட்ச ரூபாய் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.