Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

January 11, 2018
in News, Uncategorized, World
0
காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சீதை (வயது 55). இவர்களுக்கு சொர்ணமாரி (25), பத்மா (23) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனி இறந்து விட்டார். சொர்ணமாரி அப்பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இவர் பள்ளி படிப்பு படிக்கும் போது பனையூரை சேர்ந்த தனியார் பஸ் கண்டக்டர் வேலுச்சாமி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. கடந்த 10 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீதை தனது மகள் சொர்ணமாரிக்கும், அவரது காதலன் வேலுச்சாமிக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதையடுத்து சீதை, வேலுச்சாமி வீட்டிற்கு சென்று திருமணம் குறித்து பேசினாராம். அப்போது வேலுச்சாமி இன்னும் சில மாதங்களில் சொர்ணமாரியை திருமணம் செய்து கொள்கிறேன். விரைவில் நிச்சயதார்த்தம் வைத்துக்கொள்வோம் என கூறி உள்ளார்.

இதனால் மகளுக்கு விரைவில் திருமணம் நடத்தி வைத்து விடலாம் என்ற நிம்மதியுடன் சீதை வீடு திரும்பினார். ஆனால் மாதங்கள் பல கடந்தும் வேலுச்சாமி திருமணம் குறித்து பேசாமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் சொர்ணமாரி, அவரது தாய் சீதை ஆகியோர் மனமுடைந்த நிலையில் இருந்து வந்துள்ளனர்.

இதற்கிடையே வேலுச்சாமியிடம் அவரது பெற்றோர் நீ சொர்ணமாரியை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என கூறி உள்ளனர். இதையடுத்து சில நாட்களில் வேலுச்சாமி குடும்பத்தினர் சொர்ணமாரி வீட்டிற்கு வந்து நிச்சயதார்த்தம் செய்துள்ளனர். பின்னர் சில நாட்களில் சொர்ணமாரியை சந்தித்த அவரது காதலன் இப்போது நான் உன்னை திருமணம் செய்ய மாட்டேன் என கூறி விட்டு சென்னைக்கு சென்று விட்டாராம்.

இதனால் மனவேதனையடைந்த சொர்ணமாரி, தனது தாய் சீதை, தங்கை பத்மா ஆகியோருடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி நேற்று இரவு அவர்கள் 3 பேரும் வீட்டில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை வெகுநேரமாகியும் சீதையின் வீடு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர்.

அப்போது அங்கு தாய் உள்பட 3 பேரும் வி‌ஷம் குடித்து பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவலறிந்த வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 3 பேர் தற்கொலைக்கு காரணமான வேலுச்சாமியிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். முன்னதாக போலீசார் சீதை வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு சொர்ணமாரி காதலனுக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியது. அதனை கைப்பற்றி போலீசார் விசாரணை தீவிர நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் அம்பையை சேர்ந்த சீதை குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்புதான் சங்குபுரத்தில் குடியேறி உள்ளனர். தற்போது கண்டக்டர் வேலுச்சாமி சென்னையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறாராம். அவரை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். காதல் விவகாரத்தில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Previous Post

பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர்

Next Post

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்

Next Post
பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்

பிரித்தானிய கல்வி அமைச்சர் பதவி விலகினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நாளை பல மாவட்டங்களுக்கு கடும் வெப்பம் நிலவும்: வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையின் ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

July 21, 2026
தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

தலைமுறைகளை கடந்து தேசிய விருதுகளை தொடர்ந்து குவித்து வரும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம்

July 21, 2026
மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

மாற்றுவீரர் டொரெஸ் மேலதிக நேரத்தில் புகுத்திய கோல் ஸ்பெய்னை உலக சம்பியனாக்கியது

July 20, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

16 ஆண்டுகளுக்குப் பிறகு பிபா உலகக் கிணத்தை ஸ்பெயின் வென்றது

July 20, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures