Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணிகளை விடுவிக்கக்கோரி ஆணைக்குழுவில் முறைப்பாடு

August 19, 2017
in News, Politics
0
காணிகளை விடுவிக்கக்கோரி  ஆணைக்குழுவில் முறைப்பாடு

சம்­பூர் மற்­றும் கடற்­க­ரைச்­சே­னைக் கிரா­மங்­க­ளில் இது­வரை விடு­விக்­கப்­படாத காணி­களை உடன் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கக்­கோரி, மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழு­வின் திரு­கோ­ண­மலை பிராந்­தி­யச் செய­ல­கத்­தில் நேற்று முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­பூர் மற்­றும் கடற்­க­ரைச்­சே­னைக் கிரா­மங்­க­ளில் உள்ள 3 கிராம அபி­வி­ருத்­திச்­சங்­கப் பிர­தி­நி­தி­கள் இணைந்து காணி­க­ளின் ஆவ­ணங்­க­ளை­யும், மனு­வை­யும் கைய­ளித்­த­னர் எனத் தெரி­விக்­கப்­பட்­டது.

”சம்­பூர் பிர­தே­சத்­தில் உள்ள நான்கு முக்­கிய காணிப் பிரச்சி­னை­கள் சம்­பந்­த­மாக ஆணைக்­கு­ழு­வி­டம் ஆதா­ரங்­க­ளு­ட­னான கோவை­கள் மற்­றும் கடி­தங்­க­ளைக் கைய­ளித்­துள்­ளோம்.

அத­னு­டன் முறைப்­பாட்­டை­யும் பதிவு செய்­தோம். எமது கிரா­மங்­கள் அனல் மின் நிலை­யத் திட்­டத்­தா­லும், மீள்­கு­டி­யேற்ற நட­வ­டிக்­கை­க­ளி­லும் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இது தொடர்­பாக தொடர்ச்­சி­யாக நாம் பல தரப்­பி­லும் முறை­யிட்டு வரு­கின்­றோம். எங்­க­ளு­டைய கிரா­மம் மூன்று கட்­டங்­க­ளா­கக் குடி­யேற்­றப்­பட்­டது.

365 குடும்­பங்­கள் பின்­னர் படிப்­ப­டி­யாக 950 குடும்­பங்­கள் வரை, குடி­யேற்­றப்­பட்­டது. அதன்­போது 818 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­டன. ஆனால் அவற்­றுக்­கான முறை­யான ஆவ­ணங்­கள் தரப்­ப­ட­வில்லை.

அதனை வழங்க ஆவன செய்ய வேண்­டும். சாயக்­கர வட்­ட­வான் என்ற பகு­தி­யில் 40 ஏக்­கர் காணிகளைக் கடற்­படை கோரி­ய­தற்­கி­ணங்க 18 குடும்­பங்­கள் விட்­டுக்­கொ­டுத் த­னர். அதற்­கான மாற்று ஒழுங்கு எது­வும் இன்­னும் செய்­யப்­பட வில்லை. ஆனா­லும் படை­யி­னர் 400 க்கும் மேற்­பட்ட ஏக்­கர் காணி­க­ளைப் பிடித்து வைத்­துள்­ள­னர்.

அவை அனைத்­தும் எமது மக்­க­ளின் வாழ்­வா­தா­ரக் காணி­கள். அனல் மின் நில­யத்­துக்கு நீர் மற்றும் நிலக்­கரி கொண்டு செல்­வ­தற்­கான பாதை­ய­மைப்­புக்­கென 49 குடும்­பங்­க­ளின் காணி­கள் எடுக்­கப்­பட்­டன. அவை­யும் இன்­னும் முறை­யாக மீளக்­கை­ய­ளிக்­கப்­ப­ட­வில்லை.

அனல்மின் நி­லை­யம் கைவி­டப்­பட்ட நிலை­யில் அவை மீள வழங்­கப்­பட வேண்­டும். மேற்­படி பிரச்­சி­னை­க­ளைத் தெளி­வு­ப­டுத்­தும் வகை­யில் ஆவ­ணங்­களைச் சேக­ரித்து அதற்­கான கடி­தங்­க­ளை­யும் மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவி­டம் சமர்ப்­பித்­துள்­ளோம் ” என்று சம்­பூர் கிழக்கு கிராம அபி­வி­ருத்­திச்­சங்­கத் தலை­வர் எஸ்.சண்­மு­க­நா­தன் தெரி­வித்­தார்.

Previous Post

போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க முடியாது – திலக் மாரப்பன

Next Post

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

Next Post
மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

மைத்திரியுடன் நிற்கும் மாணவர் விபரங்களை திரட்டிய ஐநா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures