Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமல் போனவர்களின் உயிரை கொடுக்க முடியாது | நீதி அமைச்சர் சர்ச்சைப் பேச்சு

February 18, 2022
in News, Sri Lanka News
0
அரசியல் கைதிகள் 27 பேர் விரைவில் விடுவிப்பு – நீதி அமைச்சர்

எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நினைக்கின்றோம் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

வார இறுதி பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் இன்று வரை எண்ணிக்கை தொடர்பாக உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. ஒவ்வொரு எண்ணிக்கையை கூறிக் கொண்டுள்ளனர்.

யுத்த காலகட்டத்தில் குறித்து ஒரு எண்ணிக்கையானோர் காணாமல் போயுள்ளனர் என்பதை நாம் மறுக்கவில்லை. அதேபோல் பாதுகாப்புப் படைகளில் இருந்தும் நான்காயிரத்திற்கும் அதிகமானவர்கள் காணாமல் போயுள்ளனர்.

பாதுகாப்புத் தரப்பிடம் இது குறித்து பதிவுகள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க முடிந்துள்ளது.

பாதுகாப்பு படைகளில் இருந்தே நான்காயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையானோர் காணாமல் போயுள்ளனர் என்றால் அதே எண்ணிக்கையில் அல்லது அதற்கும் அதிகமானோர் விடுதலைப் புலிகள் தரப்பிலும் காணாமல் போயிருக்க வேண்டும் என்பதே உண்மை.

இது யுத்தம். இதில் நிராயுதபாணியாக இருந்த ஒரு தரப்பை இராணுவ ஆயுதத்தால் கட்டுப்படுத்தியதாக கூற முடியாது.

விடுதலைப் புலிகளும் மிகப் பலமான சகல ஆயுத குழுக்களையும் கொண்ட அமைப்பாக இருந்தனர். ஆகவே பலமான இரண்டு தரப்புக்கு இடையிலான நேரடி யுத்தமொன்றே இங்கு இடம்பெற்று முடிந்துள்ளது.

இந்த யுத்தத்தில் தமிழர் தரப்பில் பலர் காணாமல் போயிருக்கலாம். அவர்களின் உயிரை மீண்டும் தாருங்கள் என கேட்டால் எம்மால் கொடுக்க முடியாது. ஆகவே தான் இந்த பிரச்சினைகளை ஒரு முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் பாதிக்கப்பட்ட தரப்பின் பக்கத்திற்கு அதிக முக்கியத்துவத்தை கொண்டுவந்து தீர்வுகளை வழங்க முயற்சிக்கின்றோம்.

ஆனால் இதனை தமிழர் தரப்பு நிராகரித்துக் கொண்டு காணாமல் போனவர்களின் உயிரைத் தாருங்கள் என்று கேட்டால் அவ்வாறு கொடுக்க முடியாது.

இதனை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்காது இந்த பிரச்சினைகளில் இருந்து வெளியில் வருவதுடன் பாதிக்கப்பட்ட தரப்பினரின் தேவைகளை பூர்த்தி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காணாமல் போனோரின் குடும்பத்தினருக்கு செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்க தயாராக உள்ளோம்.

இழப்பீடுகளை, மரண சான்றிதழை வழங்கத் தயாராகவே உள்ளோம். யுத்தத்திற்கு முகம்கொடுக்கும் வேலையில் இரண்டு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்படும். இராணுவம் மற்றும் புலிகளை தவிர்த்து பொதுமக்களும் இந்த யுத்தத்தில் காணாமல் போயிருப்பார்கள் என்பதை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இதனையே எத்தனை காலத்திற்கு பேசிக் கொண்டு இருக்க முடியும்.

பேசிக் கொண்டே இருந்தால் எப்போதுதான் முடிவு காண்பது. ஆகவே நடந்ததை ஏற்றுக்கொள்கின்றோம். ஆனால் உயிரை மீண்டும் தர முடியாது. யார் காணாமல் போனவர்கள் என்ற தகவல்களை எமக்குத் தாருங்கள்.

அவர்கள் குறித்து நாம் விசாரணைகளை நடத்தி அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

எம்மை பொறுத்தவரை பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நினைக்கின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News – YouTube | [email protected]

Previous Post

சாதனை சிகரத்தைத் தொட்ட ‘அரபிக் குத்து’

Next Post

யாழில் பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழந்த இருவர்

Next Post
இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சி!

யாழில் பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழந்த இருவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures