Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர் பதவிக்கான விண்ணப்பம் கோரல்

September 30, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்

2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தப்பட்டவாறான) சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் காணாமற்போனவர்கள்  பற்றிய அலுவலகத்தில் 2025 ஒக்டோபர் மாதத்தில் ஏற்படக்கூடியதான உறுப்பினர் பதவிக்கான வெற்றிடமொன்றை நிரப்புவதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

நிகழ்வு கண்டறிதல் அல்லது நுண்ணாய்வு, மனிதவுரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம், மனிதாபிமான பதிலிறுப்பு என்பவற்றின் முன்னனுபவம் கொண்டவர்களிடமிருந்தும் அல்லது, காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் பணிகளை நிறைவேற்றுவதற்கு இயைபான ஏனைய தகைமைகளை உடையவர்களிடமிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

பாராளுமன்ற இணையத்தளத்தில் ( www.parliament.lk ) ‘கா.ஆ.அ. விற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற துரித இணைப்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் பிரகாரம் தயாரிக்கப்பட்டு, முறையாகப் பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் 2025 ஒக்டோபர் 14 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் பதிவுத் தபாலில் அரசியலமைப்புப் பேரவைக்கான பதில் செயலாளர் நாயகம், அரசியலமைப்புப் பேரவை – அலுவலகம், இலங்கைப் பாராளுமன்றம், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே, எனும் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். 

அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும். கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் அல்லது மின்னஞ்சலின் விடயமாகக் ‘காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்திற்கான உறுப்பினர் நியமனம்’ எனக் குறிப்பிட வேண்டும்.

Previous Post

பரஸ்பர மரியாதையுடன் கலாசாரத்தில் சமகாலத்தவர்கள்– மஹிந்த ராஜபக்ஷ

Next Post

ரணிலும் மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள் – கடுந்தொனியில் சாடும் தமிழ் அமைச்சர்

Next Post
செம்மணி; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – இராமலிங்கம் சந்திரசேகர்

ரணிலும் மகிந்தவும் நம்பர் வன் திருடர்கள் - கடுந்தொனியில் சாடும் தமிழ் அமைச்சர்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures