Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கவர்னர் கிரண்பேடிக்கு அதிமுக கடும் கண்டனம்

July 1, 2019
in News, Politics, World
0

அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அ.தி.மு.க. அரசைப்பற்றியும், அதன் நிர்வாகத்தை பற்றியும் குறை கூற புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எந்த தகுதியும் கிடையாது.

தண்ணீர் பிரச்சினை என்பது இயற்கை சம்பந்தப்பட்டது. பெருமழை வரும்போது வெள்ளமும், வறட்சி ஏற்படும்போது தண்ணீர் பிரச்சினையும் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும்

தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீருக்கு மாற்று ஏற்பாடாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்வரும் பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில் சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுவை மாநில கவர்னர் கிரண்பேடி வழக்கம் போல் தனது மலிவு விளம்பரத்துக்காக இப்பிரச்சினையில் தமிழக அரசை குறை கூறி உள்ளதை புதுவை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்களால் துரத்தியடிக்கப்பட்டு தோல்வி கண்டு குறுக்கு வழியில் நியமன பொறுப்பான கவர்னர் பதவியில் உள்ள கிரண்பேடிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாட்சி நடத்தும் அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூற தகுதி கிடையாது.இவ்வாறு சண்டித்தனமான மோதல் நடவடிக்கையை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தனது உயரம் என்ன? தனது தகுதி என்ன? என்பதை உணராமல் ஒரு மாநிலத்தின் துணை நிலை கவர்னர் பிற மாநில ஆட்சியை பற்றி குறை கூறுவது அரசியல் அமைப்பு சட்டப்படி குற்ற செயலாகும்.தமிழக அ.தி.மு.க. அரசைப்பற்றி குறை கூறி குற்றம் சுமத்திய தனது பேச்சை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லையெனில் கிரண்பேடியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தலைமை அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.கவர்னரின் வரம்பு மீறிய இச்செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும்.தமிழகத்தில் மிக முக்கியமான ஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை குறை கூறினார். தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல வி‌ஷயங்களில் விமர்சித்து இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.முதலில் புதுவை மாநிலத்தின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து நிர்வாகத்தையும் பார்ப்பதை விட்டுவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து நல்லாட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசைப்பற்றி பேசுவது கிரண்பேடிக்கு உகந்தது அல்ல.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Previous Post

தமிழக சட்டசபையில் முதல்வர்- காங்கிரஸ் காரசார விவாதம்

Next Post

சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் – கனகதுர்க்கா

Next Post

சபரிமலைக்கு சென்று மீண்டும் ஐயப்பனை தரிசிப்பேன் - கனகதுர்க்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

போர் வீரர்கள் நினைவிடத்தில் பதற்றம் : விமல் வீரவங்சவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கைக்குள் வரப்போகும் விடுதலைப் புலிகளின் கறுப்புப் பணம் : எச்சரிக்கும் விமல் வீரவன்ச!

July 6, 2026
யோகி பாபு வெளியிட்ட ‘திரள்’ பட முதல் தோற்றப் பார்வை

பத்துக்கும் மேற்பட்ட வேடங்களில் நடிக்கும் யோகி பாபு

July 6, 2026
எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

எம்பாப்பேயின் பெனல்டி கோலின் பலனாக கால் இறுதியில்   விளையாட பிரான்ஸ் தகுதி

July 5, 2026
கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

கேப்பாபுலவு மக்களின் பூர்வீக காணிகளை விடுவிக்கக் கோரி 12வது நாளாக தொடரும் போராட்டம்

July 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures