கனடாவிற்கான இந்தியத் தூதுவர் மரியாதைக்குரிய விகாஸ் ஸ்வாரப் அண்மையில் கனடாவின் மிசிசாகா நகரில் உள்ள சரவணபவன் உணவகத்தின் கிளைக்கு விஜயம் செய்தார்.
அவரை வரவேற்ற சரவணபவன் உணவகத்தின் கனடா கிளைகளின் உரிமையாளரும் தலைவருமான திரு கணேசன் சுகுமார் பின்னர் தனது பிரதான சமையல் வல்லுனர் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு அறிமுகம் செய்து வைத்தார். கனடாவில் சரவணபவன் உணவகத்தின் இரண்டு கிளைகள் ஏற்கெனவே ஸ்காபுறே◌ா மற்றும் மிசிசாகா நகரங்களில் கிளைகள் உள்ளன. மிக விரைவில் வன்கூவர் நகரத்திலும் மூன்றாவது கிளை திறக்கப்படவுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.