Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் வெளியாகும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் 

October 10, 2024
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் வெளியாகும் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் நூல்கள் 

கனடாவில் ஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் வெளியிடப்பட உள்ளது.

பாலஸ்தீனம் எரியும் தேசம், ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல், இலங்கை இதழியலில் சிவகுருநாதன், ஆகியஐங்கரன் விக்கினேஸ்வராவின் மூன்று நூல்கள் வெளியீடு ஸ்கார்பரோ ரீகிரியேசன் சென்டர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. (Scarborough Recreation Centre, 3600 Kingston Rd, Scarborough, ON M1M 1R9)

எதிர்வரும் 3ம் திகதி நவம்பர் 2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 1600 முதல் 1900 மணி வரை இவ் வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளது.இந்நிகழ்வின் தலைமையுரையை பேராசிரியர். இ. பாலசுந்தரம் அவர்கள் வழங்குவார். அத்துடன் சிறப்புரையை தமிழர் தகவல் ஆசிரியர் திரு. எஸ். திருச்செல்வம் அவர்கள் வழங்குவார்.

இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் வாழ்த்துரையை புகழ்பெற்ற வானெலி அறிவிப்பாளர் திரு. இளங்குமரன், கனடா தமிழ்ப் பாடசாலைகளின் அதிபர் திரு. கா. யோ. கிரிதரன், மற்றும் எழுத்தாளர் திருமதி. சிறி ரஞ்சினி ஆகியோர் வழங்குவர்.

பாலஸ்தீனம் எரியும் தேசம் நூல் அறிமுகவுரையை அரசியல் ஆய்வாளர் திரு. திரு. லெனி மரியதாஸ் அவர்கள் நிகழ்த்துவார். அதன்பின் ஓர்மத்தின் உறைவிடம் இஸ்ரேல் நூலின் அறிமுகவுரையை எழுத்தாளர் திரு. மீரா பாரதி அவர்கள் ஆற்றுவார். அத்துடன் இலங்கை இதழியலில் சிவகுருநாதன் நூலின் அறிமுகவுரையை கவிஞர் திரு. அகனி சுரேஷ் அவர்கள் ஆற்றுவார்.

அத்துடன் இந்நூல் வெளியீட்டு நிகழ்வின் சிறப்புரையையும், நூலாசிரியரின் ஊடக – எழுத்து பற்றி உலகத்தமிழர் ஆசிரியர் திரு. கமல் நவரட்ணம் அவர்கள் வழங்குவார். கனடாவில் நிகழும் இந்நூல் வெளியீட்டின் இறுதியில் ஏற்புரையை நூலாசிரியர் திரு. ஐங்கரன் விக்கினேஸ்வரா அவர்கள் நிகழ்த்துவார்.

Uthayan News | Canada Uthayan News
Previous Post

சங்குச் சின்னத்தில் முன்னாள் போராளி நகுலேஸ் வேட்புமனுவில் ஒப்பம்

Next Post

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி குளம் வெட்டும் அனுர அரசு

Next Post
முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி குளம் வெட்டும் அனுர அரசு

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி குளம் வெட்டும் அனுர அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures