கனடாவில் ஐபோனை ஹேக் செய்ய முற்பட்ட ஹேக்கர்களை விழி பிதுங்க வைத்த தமிழர்!
கனடாவில் பட்டதாரி ஒருவர் தனது ஐபோனை ஹேக் செய்ய முற்பட்ட ஹேக்கர்களை விழி பிதுங்க வைத்துள்ளார்.வாட்டர்லூ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பயின்ற பட்டதாரி கபில் ஹரிஸ் விக்னேஸ்வரன். இவர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமையில் சிறந்த நிபுணத்துவம் கொண்டவர்.
அவருக்கு நடந்த சம்பவம் குறித்து கூறியதாவது, நான் என் நண்பர்களுடன் படித்துக்கொண்டிருந்தேன், அப்போது என் ஐபோன் பயங்கர ஒலி எழுப்பியது.
அது Find My iPhone செயலியின் எச்சரிக்கை ஒலி என உணர்ந்தேன். ஏதோ பிழை என்று எண்ணினேன்.
ஆனால், போன் மீண்டும் ஒலி எழுப்பியது. போனை எடுத்த பார்த்த போது, திரையில் “Hey Why Did You Lock My Phone? HaHa” செய்தியுடன் போன் லாக் ஆகி இருந்தது.சூழ்நிலையை சரி செய்ய நினைத்தேன். ஐபோனின் செயல்பாடுகள் குறித்து எனக்கு நன்றாக தெரியும்.
என்னுடைய அக்கவுண்ட்டை ஹேக் செய்ய ஹேக்கர்களுக்கு என்ன தேவை என்பதும் எனக்கு தெரியும்.
உடனே போன் மற்றும் லேப்டாப் உடன் இணைப்பில் இருந்த Wi-Fi உட்பட அனைத்து இணைய தொடர்புகளையும் அணைத்துவிட்டேன். பிறகு i cloud பாஸ்வேர்டை மாற்றினேன்.
ஹேக்கர்கள் என்னை குறி வைப்பார்கள் என நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. பாதுகாப்பு குறை குறித்து ஆப்பிளிடம் புகார் அளித்துள்ளேன். எனினும், ஹேக்கர்கள் தவறான நபருடன் மோதி விட்டனர் என கூறினார்.