Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை

May 26, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
கனடாவில் ஆபத்தின் விழிம்பில் முதியவர்கள்

கனடாவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈழத்தமிழரான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனும் ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு (SHN)அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

 1969 ஆம் ஆண்டு யாழ்.வடமராட்சியில் பிறந்த ரோய் ரத்னவேல். பதினேழு வயதில், ஒரு அரசியல் கைதியாகி, கொடூரமான மற்றும் அடக்குமுறை சூழ்நிலைகளில் கடுமையான மாதங்களைக் கழித்தார்.

சிறையில் இருந்து அதிர்ஷ்ட வசமாக விடுவிக்கப்பட்ட பிறகு, பதினெட்டு வயதில் கனடாவுக்குத் தனியாக வந்த ரத்னவேல், தற்போது கனடாவின் மிகப்பெரிய சுயாதீன சொத்து மேலாண்மை நிறுவனத்தில் ஒரு நிர்வாகியாக உள்ளார்.

மனநலம் தொடர்பான பெரும் சவால்கள்

அத்துடன், சித்திரவதை மற்றும் சிறைவாசத்திலிருந்து தப்பித்து, சட்டைப்பையில் $50 உடன் கனடாவுக்கு வந்து, பின்னர் அஞ்சல் அறையிலிருந்து கனடாவின் மிகப்பெரிய சுயாதீன சொத்து மேலாண்மை நிறுவனத்தின் நிர்வாக அறைக்கு உயர்ந்த ஒரு முக்கிய தமிழரின் நம்பமுடியாத கதையான தனது Prisoner #1056 ஐயும் அவர் பகிர்ந்து கொண்டார்.

கனடாவில் ஈழத்தமிழரின் முன்மாதிரியான செயற்பாடு: நன்கொடையாக வழங்கிய பெருந்தொகை | Million Dollar Donation From Eelam Tamil In Canada

இவ்வாறான விடயங்கள் மூலம் மனநலம் தொடர்பான பெரும் சவால்களை நன்கு அறிந்திருக்கும் ரோய் ரத்னவேல், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சரியான ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.

இதன்படி, பன்முகத்தன்மை கொண்ட சமூகத்திற்கு அத்தியாவசிய மற்றும் சிறப்பு சுகாதார சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு (SHN)அறக்கட்டளைக்கு அவரும் அவரது மனைவியும் மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

ரோய் ரத்னவேல் குடும்பம் வழங்கிய இந்த நன்கொடை மனநல சவால்களை எதிர்கொள்ளும் தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையில் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன், பிர்ச்மவுண்ட் மருத்துவமனையில் உள்நோயாளி மனநலத்தை விரிவுபடுத்துவதற்கும், தொடர்ச்சியான மனநல நிலைமைகள் மற்றும் பிற சிக்கலான சுகாதாரத் தேவைகளைக் கொண்ட பாதிக்கப்படக்கூடிய நபர்களை ஆதரிப்பதற்கும் அது குறிப்பாக உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Previous Post

வடக்கு – கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

Next Post

நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்

Next Post
நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்

நியூசிலாந்து துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் ஜனாதிபதியை சந்தித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures