கனடாவின் மிக முக்கியமான வணிக நகரம் இதுதான்! இன்னும் பல சுவாரசியங்களுடன்

கனடாவின் மிக முக்கியமான வணிக நகரம் இதுதான்! இன்னும் பல சுவாரசியங்களுடன்

மிஸ்ஸிஸாக்கா(Mississauga) கனடா நாட்டில் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள ஒரு நகரம். இது ஒண்டாரியோ ஏரியின் தெற்கு நதிக்கரையில் அமைந்துள்ள கனடாவின் ஆறாவது பெரிய நகரம்.

இது ஆரம்பத்தில் டொரொண்டோவின் ஒரு துணை நகரம் போலதான் உருவானது. மக்களின் ஆர்வமான குடியேற்றத்தால் பெரிய நகரமாக உருவெடுத்தது. பெரிய நகரத்திற்கான மைய அமைப்புகள் பிறகு திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டன.

இங்கு ஆங்கிலோ அமெரிக்க மக்கள் அதிகமாக வாழ்ந்தாலும் கடந்த சில தசாப்தங்களாக பலதரப்பட்ட இன, பண்பாடு, கலாச்சாரங்களே இதன் பிரதான அடையாளமாக மாறியது. இங்குள்ள குடிமக்கள் ’மிஸ்ஸிஸாகன்ஸ்’ அல்லது ’ஸாகன்ஸ்’ என அழைக்கப்படுகின்றனர்.

பிரதான அடையாளங்கள்

மிஸ்ஸிஸாகவின் பிரதான அடையாளங்கள் என்றால், மிஸ்ஸிஸாக ஸ்கைலைன், டொராண்டோ மிஸ்ஸிஸாக பல்கலைக்கழகம், முழுமையான உலக கோபுரங்கள், டவுண்டவுன் ஸ்கைலைன், மிஸ்ஸிஸாக சிவிக் மையம், ஸ்கைலைன் தொகுப்பு வீடுகள் ஆகும்.

டொராண்டோ பியர்சன் விமானநிலையம் கனடாவின் மிகவும் பயணிகள் நகர்வுடைய விமான நிலையம் ஆகும்.

கனடாவின் பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைமை அலுவலகங்கள் உள்ள இடம் இந்த மிஸ்ஸிஸாக நகரம்தான்.

ஏரியின் முகப்பிலும் துறைமுகத்தை சுற்றிலும் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் நிறைந்திருக்கின்றன. இரவில் விளக்குகளோடு ஜொலிப்பது ஒரு மாநகர அழகூட்டலுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நகரின் மையத்தில் பிரபலமான சதுக்கம் உள்ளது அங்கு பன் திருவிழாக்கள் நடக்கின்றன. பல விதமான வடிவில் பல நகர பூங்காக்கள் அமைந்துள்ளன.

வரலாறு

1600 களில் ஐரோப்பியர்கள் இங்கு குடியேறினார்கள். ஆனாலும் அதற்குமுன் அங்கு கிரெடிட் ஆறு பள்ளத்தாக்குப்பகுதிகளில் பழங்குடியினர் வாழ்ந்துள்ளனர். ’மிஸ்ஸிஸாக’ என்றாலே ’நதியின் வாய்’ என்ற பொருளுடைய வேர்ச்சொல்லாகும்.

1805 ஆகஸ்ட் 2 ல் இது தனி நகரமாக அலுவலக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

காடுகளின் வழிகளில் ஒரு நகரமாக அமைந்து காணப்படுவது இதன் தனி அழகு. வியப்பான வணிக வளாக அமைப்புகள் பிரமிப்பையும் பிரபலமான ஒரு ஷாப்பிங் இலக்கையும் ஏற்படுத்துகிறது.

காண சிறந்த சில இடங்கள்

ப்ளேடியம்

இது குடும்பங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு மையம், 200 க்கும் மேற்பட்ட வீடியோ விளையாட்டுகள், சவாரிகள், என இன்னும் ஏராளான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.

எரின் மில்ஸ் நகர மையம்

இது புதுப்பிக்கப்பட்ட ஒரு வித்தியாசமான மால், இது இரண்டு அடுக்கு உட்புறங்களை கொண்ட மால். வகைவகையான ஆடைகள் கடைகள், டிபார்ட்மெண்ட ஸ்டோர்ஸ், துரித உணவு நிறுத்தங்கள் என ஒரு பரந்த வியாபார சேவையை தனக்குள் கொண்டிருக்கும் குட்டி நகரம்.

இதுபோல, டிக்ஸி வெளிவாயில் மாலும் உள்ளது. இது அனைத்துவிதமான 135 வெளிவாயில் கடைகளை கொண்டுள்ள அழகிய வளாகம்.

ஆடம்சன் எஸ்டேட்

இது ஒன்ராறியோவின் கிழக்கு எல்லையில் உள்ள ஆடம்பரமான எஸ்டேட், இது 1975 ம் ஆண்டு அகர் ஆடம்சன் குடும்பத்தினரிடமிருந்து கிரெடிட் பள்ளத்தாக்கு பாதுகாப்பு ஆணையத்தால் வாங்கப்பட்டது. மிஸ்ஸிஸாகாவில் இதுவும் பார்க்க வேண்டிய ஒரு சிறந்த இடம்.

வாழ்க்கை கலை மையம்

இது பல்வேறு நிகழ்ச்சிகளின் கலை மையம். இங்கு கலைநிகழ்ச்சிகள், நாடகம், காற்றோட்டமான ஓட்டல்கள், கண்காட்சிகள் மற்றும் வகுப்புகள் நடக்கின்றன.

சி.என். டவர்

இதை மிஸ்ஸிஸாகாவின் லேண்ட்மார்க் எனலாம். இது 553 மீட்டர் உயரமுள்ள கூம்பு கோபுரம். இதில் உள்ள கண்ணாடியால் ஆன தளங்கள் மற்றொரு சிறப்பு.

இங்கு இயங்கும், சுழலும் உணவகங்கள் உள்ளிருப்பவர்களுக்கு நகரம் முழுதுமாக மேலிருந்து பனோரமிக்காக பார்க்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. இது அழகு மற்றும் ஆடம்பரத்தின் ஒரு கலைவெளிப்பாடாக பயணிகளை கவர்கிறது.

ஹெர்ஷே மையம்

இது பல பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய ஒரு வளாகம். உடற்பயிற்சி மற்றும் பல விளையாட்டுகளின் மையமாகவும் கூடுதலாக பனிச்சறுக்கு வளையங்களையும் உள்ளடக்கியது.

மேலும், 37,280 சதுர மீட்டர் அளவில் அமைக்கப்பட்டுள்ள மிஸ்ஸிஸாக சிவிக் மையம் நவீனத்துவ கட்டட அமைப்புக்கு ஒரு உதாரணம், ரசிப்பதற்கும் அசாதாரணம்.

மொத்தத்தில், மிஸ்ஸிஸாக லேட்டஸ்டா உருவாகி இருந்தாலும் ஒரு கிரேட்டஸ்ட்டு நகரம் என்பதில் மிகையில்லை.

– See more at: http://www.canadamirror.com/canada/70785.html#sthash.T0Cf6M1g.dpuf

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News