ரஷியாவில், கடற்படை தினத்தை முன்னிட்டு அந்நாட்டின் போர் கப்பல்கள் கண்கவர் அணிவகுப்பு நடத்தின.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகில் உள்ள பின்லாந்து வளைகுடா பகுதியில், பால்டிக் கடல் பரப்பிலிருந்து சிரியா நாட்டின் கடலோர பகுதிவரை போர்க்கப்பல்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், சிறப்புரையாற்றி, கடற்படைக்கு சொந்தமான 43 போர்க்கப்பல்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். இதனை காண ஏராளமான பொதுமக்களும் வந்திருந்தனர்.
நிகழ்ச்சியில் ரஷ்யாவின் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியாவின் ஐஎன்எஸ் டர்காஷ்((INS tarkash)) அணிவகுப்பில் கலந்து கொண்டது. அப்போது, இந்திய கேப்டன் சதீஷ் வாசுதேவ் அதிபர் புதினை நோக்கி வணக்கம் வைத்து, மரியாதை செலுத்தினார்.













