கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் சின்னாபின்னமாகி உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு, அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும், பொதுமக்களும், நடிகர்களும் உதவி வருகின்றனர்.
இந்நிலையில் விஷால் டுவிட்டரில் வேண்டுகோள் வைத்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது : கஜா புயல், இயற்கையின் கோபமாகவே தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு, உடைகள் மட்டும் வழங்கினால் போதாது, அனைவரும் ஒன்றாக இணைந்து தென்னை மரக் கன்றுகளை வழங்கி நம்மால் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். காவிரி டெல்டாவை மீட்டெடுப்போம் என கூறியுள்ளார்.

