Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

February 12, 2017
in News, Politics
0
ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

ஓரளவுக்குத்தான் பொறுமை! செய்ய வேண்டியதை செய்வோம்! சசிகலா ஆவேசம்

ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று போயஸ் கார்டனில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஆவேசமாக பேசினார்.

முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று போயஸ் கார்டனில் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது, அவர் கூறியதாவது,

ஒன்றரைக்கோடி தொண்டர்களை ஜெயலலிதா என்னிடம் விட்டுச் சென்றிருக்கிறார். இந்த கட்சியையும், இந்த ஆட்சியையும் வழி நடத்த வேண்டிய பொறுப்பு என்னிடம் உள்ளது. தொண்டர்களின் துணை எனக்கு இருக்கும்போது ஒருசிலரின் ஆட்டங்கள் இங்கே ஒன்றும் செய்துவிட முடியாது.

எனக்கு எல்லாமே நீங்கள்தான். ஆட்சியையும், கட்சியையும் நான் பத்திரமாக காப்பாற்றுவேன் என்றுதான் ஜெயலலிதா உறுதியாக நினைத்து என்னிடம் விட்டுச்சென்றிருக்கிறார்.

புரட்சித் தலைவருக்கு பிறகு அதிமுகவை ஜெயலலிதா பல சோதனைகளை தாண்டி கட்டிக்காத்தார். அதனுடைய பலன் இன்று இந்தியாவிலேயே அதிமுக மூன்றாவது கட்சி என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

ஜெயலலிதா இப்போது நம்மிடம்தான் இருக்கிறார். நம் கழகத்தில் உள்ள புல்லுருவிகளை ஜெயலலிதா அடையாளம் காட்டிக்கொண்டிருக்கிறார். இன்று நடக்கும் சூழ்நிலைகளை பார்த்து நமக்கு தெரிகிறது.

ஒன்றரை கோடி தொண்டர்கள் நம்மிடம் இருக்கும் வரை, நம்மை பிரித்தாள நினைக்கும் எவராக இருந்தாலும் தோற்றுப்போவார்கள்.

நம் இயக்கம், ஜெயலலிதா சொன்னது போல் ஒரு எஃகு கோட்டை. அந்த கோட்டையை யாரும் அசைக்க முடியாது. ஜெயலலிதாவும் நிறைய போராட்டங்களை சந்தித்துத்தான் இந்த இயக்கத்தை நடத்தி வந்தார்.

இப்போது நமக்கும் அந்த சோதனை வந்திருக்கிறது. நாமும் அதில் வென்று காட்டுவோம். நீங்கள் என்னுடன் துணை நிற்கும்போது நான் எதற்கும் அஞ்சப்போவதில்லை.

நாம் நியாயமாகவும், ஜனநாயகத்தோடும் நம்பிக்கை வைத்துள்ளதால் கொஞ்சம் அமைதி காக்கிறோம். ஓரளவுக்கு மேல்தான் நாம் பொறுமையை கையாள முடியும். அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டியதை செய்வோம் என்று ஆவேசமாக பேசினார்.

Tags: Featured
Previous Post

சசிகலாவின் பேச்சால் ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு அதிகரிப்பு! தமிழ் நாட்டில் நாளை எதுவும் நடக்கலாம்?

Next Post

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?!

Next Post
சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?!

சசிகலாவை முடக்க பன்னீர்செல்வத்தின் வியூகம் இதுதானா?!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures