தனக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கும் அளவுக்கு தான் எந்தவித தவறையும் செய்யவில்லையென அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று கடுவெல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டியவர்கள் கட்சிக்குள் இருக்கின்றனர். இருப்பினும், இவர்கள் தொடர்பில் கட்சி எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தான் செய்த தவறு என்னவெனவும், கட்சித் தலைவர்கள் இதுவரையில் என்னிடம் எந்தவொரு விமர்சனங்களையும் முன்வைக்க வில்லையெனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.