ஒரே படத்தில் 29 பாடல்கள்! ஷாக் கொடுத்த பாலிவுட் இயக்குனர்
இந்தியாவில் பாடல் இல்லாமல் படங்கள் வருவது அரிது. ‘படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் எதோ பாடலை வைத்து டான்ஸ் ஆடுவார்கள்’ என இந்திய படங்களை பார்த்து வெளிநாட்டினர் விமர்சனம் செய்வதில் ஆச்சர்யமில்லை. ஏனென்றால் ஒரு சில படங்கள் தவிர, பெரும்பாலானவற்றில் அதுதான் நடக்கிறது.
இந்நிலையில் 29 பாடல்களை கொண்டு ஒரு படம் வெளிவரவுள்ளதுதான் கொஞ்சம் ஆச்சர்யமளிக்கும் செய்தி. ரன்பிர் கபூர், கத்ரினா கைப் நடித்து வரும் ‘ஜக்கா ஜாசூஸ்’ படம் தான் அது.
படத்தின் கதை நகர்வுக்கு இந்த 29 பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. அனுராக் பாசு இயக்கியுள்ள இந்த படம் ஏப்ரல் 7ம் தேதி வெளியாகவுள்ளது.