ஒன்றாக புதைக்கப்படவுள்ள இரண்டு ஹாலிவுட் நடிகைகள்
ஸ்டார் வார்ஸ் படங்களில் பிரின்சஸ் லீயாவாக நடித்து புகழ் பெற்றவர் கேரீ பிஷர். இவர் இறந்து 24 மணி நேரத்திற்குள் அவரின் தாயார் டெபி ரெனால்ட்ஸ் உயிரிழந்தது ஹாலிவுட்டில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஹாலிவுட் திரையுலகின் ஸ்டார் வார்ஸ் படங்களுக்கு என பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. இதில் ஹீரோயினாக நடித்த கேரி ஃபிஷர் சமீபத்தில் மாரடைப்பால் இறந்தார். அவரின் வயது 60. இந்நிலையில் இந்த செய்தியை இவருடைய அம்மா கேட்டுள்ளார்.
இதை கேட்ட இவர் அதிர்ச்சியில் உறைந்து சில மணி நேரங்களிலேயே அவரும் இறந்துவிட்டாராம், இவரின் வயது 84.
டெபி ரெனால்ட்ஸும் 1950, 60களில் பிரபலமான நடிகையாக இருந்தவர்.
இந்நிலையில் அவர்கள் இருவரின் இறுதி ஊர்வலத்தை ஒரே நாளில் நடத்தவுள்ளதாக கேரீ பிஷரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் அருகருகே புதைக்கப்படவுள்ளதால், இருவரும் என்றும் சேர்ந்தே இருப்பார்கள் என அவர் சோகத்துடன் கூறியுள்ளார்.