தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் திரு வீர் கதையின் நாயகனாக நடிக்கும் பான் இந்திய அளவிலான புதிய திரைப்படத்திற்கு ‘ஓ…!சுகுமாரி’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் பரத் தர்ஷன் இயக்கத்தில் உருவாகும் ‘ஒ…! சுகுமாரி’ எனும் திரைப்படத்தில் திரு வீர் , ஐஸ்வர்யா ராஜேஷ், ஜான்சி , விஷ்ணு ஓ லட்டு, ஆம்னி, முரளிதர் கௌட் , ஆனந்த், அஞ்சி மாமா, சிவானந்த் , கோட்டா ஜெயராம், சரண்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் சி ஹெச் குஷேந்தர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு பரத் மஞ்சி ராஜு இசையமைக்கிறார்.
கொமர்ஷல் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை கங்கா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேஸ்வரா ரெட்டி மூலி தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
இதனிடையே தெலுங்கு திரையுலகிலும் அழுத்தமாக கால் பதித்து நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படத்தின் மூலம் பான் இந்திய அளவிலான நட்சத்திர நடிகையாக உயரக்கூடும் என திரையுலக வணிகர்கள் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

