தென்னிந்திய சினிமாவின் அடையாள முகமாக போற்றப்படும் மம்மூட்டி – மோகன்லால் ஆகிய இரண்டு நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் ‘ பேட்ரியாட்’ எனும் தேசப்பற்றை மையமாகக் கொண்ட திரைப்படத்தின் வெளியீட்டு திகதியை படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்துடன் அறிவித்துள்ளனர்.
இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘பேட்ரியாட்’ எனும் திரைப்படத்தில் மம்மூட்டி , மோகன்லால், நயன்தாரா, பகத் ஃபாஸில், குஞ்சாக்கோ போபன் , ராஜீவ் மேனன், ரேவதி, ஜினு ஜோசப், தர்ஷனா ராஜேந்திரன், பிரகாஷ் பெலவாடி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மனுஷ் நந்தன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுஷின் ஷியாம் இசையமைத்திருக்கிறார். தேசப்பற்றை பின்னணியாகக்கொண்டு எக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை அன்டோ ஜோசப் ஃபிலிம் கம்பனி மற்றும் கிச்சாப்பு ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் அன்டோ ஜோசப் மற்றும் கே. ஜி. அனில் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி பல மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு வரவேற்பை பெற்று வரும் நிலையில் … இப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஒன்பதாம் 23 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் இத்தகைய அறிவிப்பை இந்திய திரையுலக பிரபலங்களில் 40க்கும் மேற்பட்டவர்கள் அவர்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

