செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என்ஜிகே. ரகுல்பிரீத்சிங், சாய் பல்லவி, ஜெகபதிபாபு ஆகியோர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிகட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தநிலையில், என்ஜிகே படத்தின் டீசரை காதலர் தினமான பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடுவதாக அறிவித்தனர். கார்த்தியின் தேவ் படத்துடன் டீசர் வெளியானாலும், சூர்யாவே தனது டுவிட்டரில் நாளை(பிப்.,14) மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். இந்த தகவலை அப்படத்தை தயாரித்துள்ள டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.