நீண்டநாள் தயாரிப்பில் இருந்த, எனை நோக்கி பாயும் தோட்டா, ஒரு வழியாக முடிந்து விட்டது. தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா, சந்தோஷ் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். கவுதம் மேனன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசை அமைத்துள்ளார். ஜோமன் டி.ஜான், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுக்கும் மேலாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், தற்போது முடிந்திருக்கிறது. படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் யுஏ சான்று கொடுத்துள்ளனர். படத்தை லைகா நிறுவனம் வாங்கி வெளியிடுகிறது. மார்ச் மாதம் வெளிவரலாம் என தெரிகிறது.