எதிர்வரும் சில நாட்களுக்கு நாட்டின் கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை அவதான மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேலும், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது, வடகிழக்கு திசையில் 20 முதல் 30 கிலோ மீற்றல் வேகத்தில் வீசும் என்றும் கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மன்னாரிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கடற்பரப்புகளிலும் அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் அவ்வப்போது கடல் சற்று கொந்தளிப்பாக காணப்படும்.
மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் பலமான காற்று வீசும் என வானிலை அவதான மத்திய நிலையம் குறிப்பிடுகின்றது.
அம்பாந்தோட்டையிலிருந்து மட்டக்களப்பு ஊடான திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் மழை பெய்யும் எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் எனவும் வானிலை அவதான மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.