Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஜாவா லேன் | கலம்போ எவ் சி

March 17, 2022
in News, Sports
0
எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் ஜாவா லேன் | கலம்போ எவ் சி

கொழும்பில் மிகவும் வெற்றிகரமான கழகங்களாக கருதப்படும்  ஜாவா லேன் மற்றும் கலம்போ எவ் சி கழகங்களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையிலான எக்ஸ்போலங்கா யூத் கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டி சிட்டி லீக் மைதானத்தில் வியாழக்கிழமை 17 ஆம் திகதி பிற்பகல் நடைபெறவுள்ளது.

இப் போட்டி பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகும்.

மிகச் சிறந்த இளம் வீரர்களைக் கொண்ட இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான இன்றைய இறுதிப் போட்டி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வருடப் போட்டியில் ஒரே குழுவில் இடம்பெற்ற இந்த இரண்டு அணிகளும் லீக் சுற்றில் மோதிக்கொண்டபோது கலம்போ எவ் சி இளையோர் அணி 2 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தது.

எனினும் இறுதிப் போட்டியில் வெற்றிபெற்று அத் தோல்வியை நிவர்த்தி செய்வதற்கு நடப்பு சம்பியன் ஜாவா லேன் இளையோர் அணி உறுதிபூண்டுள்ளது.

கால் இறுதிப் போட்டியில் மாளிகாவத்தை யூத் இளையோர் அணியை 2 – 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கலம்போ எவ்.சி. இளையோர் அணி வெற்றிகொண்டது.

அரை இறுதிப் போட்டியில் மொரகஸ்முல்லை இளையோர் அணியை 3 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் வீழ்த்தியிருந்தது.

ஆனால், இன்னுமொரு லீக்கைச் சேர்ந்த வீரர்கள் அரை இறுதியில் விளையாடியதாகத் தெரிவித்து இரண்டு அணிகளும் எழுத்துமூல ஆட்சேபங்களை சமர்ப்பித்ததால் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் விரிவான விசாரணைகளின் பின்னர் அரை இறுதிப் போட்டியை மீள நடத்துவதென தீர்மானித்தனர்.

அதேவேளை இரண்டு அணிகளிலிருந்தும் தலா 2 வீரர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மொரகஸ்முல்லை இளையோர் அணிக்கும் கலம்போ எவ்.சி. இளையோர் அணிக்கும் இடையிலான மீள் அரை இறுதிப் போட்டி கோல் எதுவும் போடப்படாமல் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டி முறையில் 5 – 4 என  கலம்போ எவ். சி. வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் சோண்டர் இளையோர் அணியை 2 – 1 என கால் இறுதியிலும் கலம்போ வெட்டரன்ஸ் இளையோர் அணியை அரை இறுதிப் போட்டியில் 7 – 6 என்ற பெனல்டி முறையிலும் ஜாவா லேன் இளையோர் அணி வெற்றிகொண்டிருந்தது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அரை இறுதிப் போட்டி 90 நிமிடங்களை நிறைவு செய்தபோது 1 – 1 என வெற்றிதோல்வியின்றி முடிவடைந்திருந்தது.

இதனை அடுத்து அமுல்படுத்தப்பட்ட பெனல்டியிலேயே ஜாவா லேன் இளையோர் அணி வெற்றிபெற்றது.

அரை இறுதிப் போட்டிகளில் பெனல்டி முறைகளில் வெற்றிபெற்ற ஜாவா லேன் மற்றும் கலம்போ எச்.சி. இளையோர் அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியில் இரண்டு அணிகளும் சம்பியன் கிண்ணத்தை சுவீகரிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடவுள்ளதால் இறுதிப் போட்டி மிகுந்த விறுவிறுப்பை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.

ஜாவா லேன் இளையோர் அணிக்கு டொனல்ட் டெறிக் பெர்னாண்டோ தலைவராக விளையாடுவதுடன் இவ்வணியில் 3 யாழ். வீரர்கள் இடம்பெறுகின்றமை விசேட அம்சமாகும்.

கலம்போ எவ்.சி. இளையோர் அணிக்கு நிக்சன் அன்தனி தலைவராக விளையாடுகின்றார்.

இலங்கையில் முன்னணி கழகங்களின் 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கு இடையில் கால்பந்தாட்டப் போட்டியை முதலாவதாக ஏற்பாடு செய்த பெருமை ஆர். புவனேந்திரன் தலைமையிலான சிட்டி புட்போல் லீக்கை சேருகின்றது.

கடந்த வருடம் குறைந்த அளவிலான கழகங்கள் பங்குபற்றிய போதிலும் இந்த வருடம் 18 கழகங்கள் 4 குழுக்களில் விளையாடின.

இவ் வருடம் சம்பியனாகும் அணிக்கு எக்ஸ்போலங்கா யூத் கிண்ணத்துடன் தங்கப் பதக்கங்களும் ஒரு இலட்சம் ரூபா பணப்பரிசும் வழங்கப்படும். இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு வெள்ளிப்பதக்கங்களுடன் 75,000 ரூபா பணப்பரிசு வழங்கப்படும்.

அத்துடன் அதிசிறந்த வீரர், அதி சிறந்த கோல்காப்பாளர் ஆகியோருக்கான விருதுகளும் வழங்கப்படும்.

அணிகள்

ஜாவா லேன் இளையோர்: 

டொனல்ட் டெறிக் பெர்னாண்டோ (தலைவர்)

எம்.ஐ. இமாதுல்லா

எம்.என். நதீம்

எம். யதுசன்

எஸ். சதுரியன்

உதயகவி

எம். டிக்சன்

ஆர். கேசிதன்

எம். ஷயிர்

எம்.எப். அப்துல்லா

ரிஷார்ட் அஹமத்

எம். அசாதுல்லா

எப்.ஆர். பரீக்

எம். ஆத்திப்

எம். முஷ்தாக்

எம். பர்மான்

அப்துல் பாசித்

ஏ. அர்ஹம்

எஸ்இ அப்துல்லா

எம். இப்ராஹிம்

எம். அஸ்கர்

ஆர். ஷெய்புல்லா

ஏ. மாலிக்

எம்.எப். பிலால்

பயிற்றுநர்: அகஸ்டின் ஜோர்ஜ்

கலம்போ எவ்.சி. இளையோர்: 

நிக்சன் அன்தனி (தலைவர்)

கிறிஸ்டோபர் தோர்ஸ்டென்சென்

பவன் சச்சின் விமுக்தி

மொஹமத் லபார்

பாசுர சலஹச

சமுனு தரின்

எம். பித்யான்

எம். இஹ்லாஸ்

எம். பாதில்

எம். காலிக்

சம்பத் விதுரங்க

எம். ஷஹீன்

எம். நிஷாத்

என். அலி

எம். ஹய்ஸாம்

எம். அப்ஷான்

எம்.ஐ. யாசிர்

எம். மனாப்

பயிற்றுநர்: திமித்ரி

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

உங்கள் துயரம் கண்டு வருந்துகிறோம் | கிருபா பிள்ளை ஆதங்கம்

Next Post

சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

Next Post
சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

சிங்கப்பூரில் வாள்வெட்டு | தாக்குதலை தடுத்து நிறுத்திய இலங்கையர் கௌரவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures