Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்ற அரசாங்கம் முயற்சிக்கிறதா – காவிந்த ஜயவர்தன

April 30, 2021
in News, Politics, World
0

இந்தியாவிலிருந்து வெளிநாடு செல்பவர்களை இலங்கையிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறதா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கேள்வியெழுப்பிய அவர் மேலும் தெரிவிக்கையில் ,

இலங்கையை உலகின் தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்களுக்கு கொவிட் காப்புறுதியும் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களை இலங்கையிலுள்ள வைத்தியசாலைகளில் அனுமதித்து சிகிச்சையளிக்க வேண்டி ஏற்படும். எனினும் பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது சில சந்தர்ப்பங்களில் முடிவுகள் தவறானவையாக வரக்கூடும்.

இவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டால் இலங்கையிலுள்ள வைத்தியர்களும் தாதிகளுமே சிகிச்சையளிக்க வேண்டியேற்படும்.

அல்லது தனிமைப்படுத்தப்பட்டிருந்தாலும் ஹோட்டல்களிலுள்ள இலங்கை பிரஜைகளே அவர்களுக்கான சேவையை வழங்குவர். இவர்கள் மூலம் இந்தியாவில் தற்போது பரவும் வைரஸ் இலங்கையிலும் பரவ ஆரம்பத்தில் எவ்வாறான நிலைமை ஏற்படும் என்பதை சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் போதுமானளவு தீவிர சிகிச்சை பிரிவுகள் இல்லை. தற்போதுள்ளவற்றிலும் 90 வீதமானவற்றில் நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே போன்று தேவையானளவு செயற்கை சுவாச கருவிகளும் இல்லை. இந்தியாவில் திரவ ஒட்சிசன் தயாரிக்கப்பட்ட போதிலும் , அதனை பறிமாற்றுவதற்கான சிலிண்டர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே இலங்கையிலும் இதுபோன்றதொரு நிலைமை ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.

Previous Post

இந்தியாவுக்கு 10 மில்லியன் டொலர்களை வழங்கியுள்ள கனடா!

Next Post

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்!

Next Post

நாட்டின் மேலும் சில பகுதிகள் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலைகளில் ஏற்படவுள்ள மாற்றம் : ஐ.எம்.எப்பிற்கு அநுர அறிவிப்பு

May 31, 2026
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

நடிகர் அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘கான் சிட்டி’ படத்தின் புதிய பாடல் வெளியீடு

May 31, 2026
18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

18 வயதுக்குட்பட்ட  கூடைப்பந்தாட்ட  ஆசிய கிண்ணத்தில் விளையாட ஆண், பெண் இரு பாலாரிலும் இந்தியாவும் ஆண்களில் இலங்கையும் தகுதி

May 30, 2026
முறைப்பாடுகளால் நிரம்பி வழியும் சிஐடி! திறக்கப்பட்டது புதிய விசாரணை பிரிவு

பொதுமக்களே, எச்சரிக்கை! – இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெயரில் போலி குறுஞ்செய்திகள்!

May 30, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures