உக்ரைன் நகரங்களின் மீது ரஸ்யா 100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
வியாழக்கிழமை காலை உக்ரைன் நகரங்களை இலக்குவைத்து ரஸ்யா 100க்கும் அதிகமான ஏவுகணைகளை செலுத்தியதை தொடர்ந்து ரஸ்யாவின் பல நகரங்களில் ஏவுகணை எச்சரிக்கை சமிக்ஞைகள் ஒலித்தன.
உக்ரைன் ஜனாதிபதியின் ஆலோசகர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
தலைநகர் உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்புசத்தங்கள் கேட்டுள்ளன.
100க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன ஏவுகணை அலை தாக்குதல் என ஜனாதிபதியின் ஆலோசகர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கீவ் ஒடசா உட்பட பல நகரங்களில் ஏவுகணை வெடிப்பு சத்தங்கள் கேட்டன என ரொய்ட்டர் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
எரிசக்தி உட்கட்டமைப்பிற்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்ப்பதற்காக ஓடேசா உட்பட பல பிராந்தியங்களில் மின்சாரங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
ரஸ்யாவின் சமாதான திட்டத்தை உக்ரைன் நிராகரித்த பின்னரே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஸ்யா ஆக்கிரமித்ததை உக்ரைன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என ரஸ்யா தனது சமாதான திட்டத்தில் தெரிவித்திருந்தது