ரஸ்யா புகையிரத நிலையமொன்றை இலக்குவைத்து மேற்கொண்ட தாக்குதலில் 22 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் .
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபையின் கூட்டத்தொடரின் நடுவில் உக்ரைன் ஜனாதிபதி இந்த தாக்குதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்- ஐம்பதுக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு பகுதி நகரான சப்லைனில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஐவர் வாகனமொன்றிற்குள் எரியுண்டுள்ளனர் 11 வயது சிறுவனும் கொல்லப்பட்டுள்ளான் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு உரையாற்றுவதற்கு தயாராகிக்கொண்டிருந்தவேளை இந்த தாக்குதல் குறித்து அறிந்ததாக உக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஸ்யா இப்படித்தான் பாதுகாப்புசபை கூட்டத்திற்கு தயாரானது என அவர் தெரிவித்துள்ளார்.