Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இளைஞர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா பெண் இராணுவத்தினர்

September 22, 2018
in News, Politics, World
0

சிறிலங்கா பெண் படை அதி­கா­ரி­க­ளினால் விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் போரா­ளி­கள் உள்­ளிட்ட தமிழ்க் கைதி­களை, பாலி­யல் வன்­கொ­டு­மைக்கு உட்­ப­டுத்தப்பட்டுள்ளனர்.

ஜெனீ­வா­வில் நேற்­று­முன்­தி­னம் இந்த அதிர்ச்­சித் தக­வல் அம்­ப­லமாகியுள்ளது.

போர் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­டது என்று அறி­விக்­கப்­பட்ட 2009ஆம் ஆண்டு முதல் இன்று வரை­யான காலப் பகு­தி­யில் தடுப்­புக் காவ­லில் வைத்து சித்­தி­ர­வ­தை­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­பட்ட நூற்­றுக்­கும் மேற்­பட்ட ஆண்­க­ளால் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட்ட மிக­வும் பயங்­க­ர­மான தக­வல்­கள் அடங்­கிய அறிக்கை சட்ட நிபு­ணர் யஸ்­மின் சூகா தலை­மை­யி­லான உண்­மைக்­கும் நீதிக்­கு­மான செயற்­திட்­டத்­தால் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

‘மௌனம் கலைந்தது – தப்பிவந்த ஆண்கள் போரை மையப்படுத்தி நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்கொடுமைகள் குறித்து பேசுகின்றனர்என்ற அறிக்கை இலங்கையிலிருந்து தப்பிவந்த 121 தமிழ் ஆண்கள் வழங்கிய தகவல்களை மையப்படுத்தித் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.

அதிர்ச்சியூட்டும் மிகவும் பயங்கரமான கொடூரங்கள் அடங்கிய இவ்வாறான தகவல்களை இதற்கு முன்னர் தான் கேள்விப்பட்டிருக்கவில்லை என்று யஸ்மின் சூகா தலைமையிலான உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டம் பகிரங்கப்படுத்திய, அறிக்கையை தயாரித்த பெல்ஜியம் லூவன் பல்கலைக் கழகத்தின் கலாநிதி ஹெலீன் குறிப்பிட்டார்.

‘உலக நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் தொடரும் கொடூரங்கள் மிகவும் மோசமானதாகக் காணப்படுகின்றது. பொஸ்னியா குறித்து ஆய்வு செய்திருக்கின்றேன்.

ஆனால் இலங்கையில் தடுப்புக் காவலில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டு, பல தடவைகள் பாலியல் வன்கொடுமைகள் குறித்த தகவல்களை கேள்விப்படும் போது மிகவும் மோசமான கொடூரத்தை உணர்கின்றேன். பலர் கட்டிவைக்கப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறான சம்பவங்களை நான் இதற்கு முன்னர் கண்டிருக்கவோ, கேள்விப் பட்டிருக்கவோ இல்லை. மிகவும் அதிர்ச்சியூட்டும் வகையிலான கொடூரங்களாக இவை இருக்கின்றன என்றார் ஹெலீன்.

ஜெனிவாவில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு 14 வயதுடைய சிறுவனும் சாட்சியமளித்திருக்கின்றான். அதேவேளை அறிக்கைக்கு தகவல் வழங்கியவர்களில் வயது கூடிய ஆண் 40 வயதை கடந்த ஒருவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தன்னை விசாரித்த புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெண் அதிகாரி மிகவும் கொடூரமான முறையில் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று ஒருவர் தெரிவித்துள்ளார்.

இராணுவ சீருடை அணிந்திருந்த அந்தப் பெண் அதிகாரி பொல்லுகளால் தாக்கியதுடன், தனது ஆண் உறுப்பை பாதணிக் கால்களால் மிதித்து, நூலைக் கட்டி இழுத்து துன்புறுத்தினார் என்றும், தமிழிலேயே அவர் கதைத்த போதிலும், அவர் சிங்களப் பெண் என்றும் கொடூரத்துக்கு முகம் கொடுத்த ஆண் தெரிவித்துள்ளார்.

சித்திரவதைக்கு உள்ளான மற்றுமொருவர் தெரிவித்த தகவல்களுக்கு அமைய, அவர் உள்பட தமிழ் ஆண்கள் அடங்கிய குழுவொன்றுக்கு, பெண் படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று இணைந்து சித்திரவதை செய்திருக்கின்றனர்.

‘பெண் பொலிஸ் அதிகாரிகள் நான்கு பேர் இருந்த அறைக்கு எம்மை ஆடைகளை களைந்து அழைத்துச் சென்றனர். இருவர் பொலிஸ் சீருடையான கட்டை பாவடை அணிந்திருந்ததுடன், மற்றைய இருவரும் சேலை அணிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் கர்ப்பிணிப் பெண்என்றும் சித்திரவதைக்கு உள்ளான தமிழ் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.

சித்திரவதைகள் தொடர்பில் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தொடர்ச்சியாக கூறிவருகின்றது. இலங்கை மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை எடுத்த மாத்திரத்தில் நிராகரிப்பதன் ஊடாக விசாரணைகளை மூடி மறைப்பதையே வாடிக்கையாக அரசு கடைபிடித்து வருவதாக புதிய அறிக்கையை தயாரித்த கலாநிதி ஹெலீன் டூகே தெரிவிக்கின்றார்.

Previous Post

நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள காதல்…!

Next Post

விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை

Next Post

விலங்குடன் உடலுறவு கொள்வது தவறில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures