Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவால்

May 23, 2019
in News, Politics, World
0

இலங்கையில் இலவச மருத்துவ சேவைகளை வழங்கும் போது மனித வளப் பற்றாக்குறை பிரதான சவாலாக அமைந்துள்ளதாக சுகாதார, போசாக்கு மற்றும் தேசிய மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் 72ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உப தலைவர்களில் ஒருவராகவும் செயற்படும் டாக்டர் ராஜித சேனாரத்ன, இலங்கையின் சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சுகாதார அமைச்சர்களுக்குத் தெளிவுபடுத்தவுள்ளார்.

எல்லா இடங்களிலும் அனைவருக்கும் சிறந்த சுகாதார சேவையென்று தொனிப்பொருளில் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற இந்த மாநாட்டில், 194 உறுப்பு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுகாதார அமைச்சர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மேலும் தெரிவித்ததாவது,

உலக சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஆரம்பித்துள்ளார். அந்த வேலைத் திட்டத்திற்கு இலங்கையின் ஒத்துழைப்பும் கிடைக்கின்றது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஒத்துழைப்புடன் இலங்கை சுகாதார துறையில் சிறந்த அடைவொன்றை எட்டியுள்ளது. உலக சுகாதார காப்புறுதியை மையமாகக் கொண்டு 5 வருட தேசிய திட்டமொன்றின் கீழ் சுகாதார சேவை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குகின்றது. இலங்கை 7 தசாப்தகாலமாக உலக சுகாதார காப்புறுதியை அனுபவிக்கின்றதோடு, அதற்காக முறையான வேலைத்திட்டமும் உள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது குறித்து அதிக கவனம் செலுத்துகின்றோம். 846 சுவதிவி நிலையங்களும் 906 சுவனாரி நிலையங்கள் மூலமும் மக்களின் நோய் அறிகுறிகள் பரிசோதிக்கப்படுகின்றன.

புகைத்தலை கட்டுப்படுத்த 90 வீத வரி மற்றும் ஒற்றை புகை பொருட்களை விற்பனை செய்வதைத் தடுக்கவும் நடவடிக்கையெடுத்துள்ளதால் புகைத்தல் வீதம் குறைவடைந்துள்ளது. மென் பானங்களின் சீனித் தன்மை ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன. சீனி, உப்பு, சுவையூட்டிகள் பாவனையை குறைக்க நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியாக மருத்துகளை உற்பத்தி செய்யும் திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் 16 மருந்துவகைகள் தொற்றா நோய்களுக்குப் பயன்படுத்தப்படுவதாகும். இதய நோய், புற்றுநோய் போன்றவற்றுக்கு இலவசமாக மருந்துவகைகள் வழங்கப்படுகின்றன.

இனங்காணப்படாத சிறுநீரக நோயாளர்களுக்கு 600 இரத்த பரிசோதனை இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 2019ஆம் ஆண்டு நிறைவில் அதனை 900ஆக உயர்த்துவது எமது எதிர்பார்ப்பாகும். அதேபோன்று, மலேரியா கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் மீண்டும் மலேரியா ஏற்படும் நிலைமையைத் தடுப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மேலும் தோல் நோய்கள், டெங்கு, எச்.ஐ.வீ உட்பட பல நோய்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற சேவைகள் பலதையும் வழங்கும் போது சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றன. மனித வள பற்றாக்குறை முக்கியமான ஒன்றாகும். திறமையானோரை வேலைக்கு இணைத்துக்கொள்வதோடு, அவர்களின் திறன்களை அபிவிருத்தி செய்வதும் முக்கியமாகும். மேலும் 3 வைத்திய பீடங்களை ஏற்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றோம். புதிய தாதி பீடங்கள் மூலம் மேலும் 2000 தாதிகளுக்கு பயிற்சி வழங்கவும் நடவடிக்கையெடுத்துள்ளோம். குடும்ப மருத்துவர் திட்டத்தையும் ஆரம்பிக்கவுள்ளோம். இலங்கையின் சுகாதார துறை அபிவிருத்திக்கு உலக சுகாதார ஸ்தாபனம் வழங்கும் ஒத்துழைப்புக்கு நன்றி கூறுகின்றேன்- என்றார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்த தீர்மானங்களும் இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படுகின்றது. எதிர்வரும் 28ஆம் திகதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் நிறைவேற்றுக் குழுவால் தயாரிக்கப்படும் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப சுகாதார விடயங்களில் கவனம் செலுத்தப்படும்.

மேலும் இந்த மாநாட்டில் சுகாதார ஸ்தாபனத்தின் கொள்கைகள் வகுத்தல், நிறைவேற்றுப் பணிப்பாளர் நியமனம், அடிப்படைக் கொள்கைகளை ஆராய்தல் மற்றும் வருடாந்த வரவு-செலவுத் திட்டத்தை அங்கீகரித்தல் போன்ற செயற்பாடுகளும் நடைபெறுகின்றன.

Previous Post

பாதுகாப்பு படையினரின் சம்பளம் அதிகரிப்பு

Next Post

இது பெளத்த நாடு அல்ல என்ற மங்களவின் கருத்து சரியானதே – அமில தேரர்

Next Post

இது பெளத்த நாடு அல்ல என்ற மங்களவின் கருத்து சரியானதே – அமில தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026

Recent News

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026
தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures