பங்களாதேஷுக்கு எதிராக நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை குழாத்தில் 7 துடுப்பாட்ட வீரர்கள், 3 சகலதுறை வீரர்கள், 7 பந்துவீச்சாளர்கள் இடம்பெறுகின்றனர்.
சரித் அசலன்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால், குசல் ஜனித் பெரேரா, கமிந்து மெண்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ ஆயோர் துடுப்பாட்ட வீரர்களாக குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.
தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரட்ன ஆகியோர் சகலதுறை வீரர்களாகவும் துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, ஜெவ்றி வெண்டசே ஆகியோர் சுழல்பந்துவீச்சாளர்களாகவும் மதீஷ பத்திரண, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ, ஏஷான் மாலிங்க ஆகியோர் வேகப்பந்துவீச்சாளர்களாகவும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.