Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையை இன்னும் இரு வாரங்களுக்கு முடக்குங்கள்: ரணில் வலியுறுத்தல்

August 26, 2021
in News
0
அரசுடன் மோத ஓரணியில் திரளுங்கள்  – ரணில் அழைப்பு

நாடு முடக்கப்படுவதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட முடக்காமல் இருப்பதால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் பாரதூரமானவையாகும். எனவே வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களிடமிருந்து ஏனையோருக்கு பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு ,  புதிதாக கொவிட் வைரஸ் பரவுவதையும் தடுக்க வேண்டியுள்ளது.

இதற்கான பிரதான வழி முடக்கமாகும். தற்போது அரசாங்கத்தால் 10 நாட்கள் நாடு முடக்கப்பட்டுள்ளமை போதுமானதல்ல என்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிப்பில் மேலும் தெரிவித்ததாவது :

இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டும். எனவே இதற்காக செயலற்படுமாறு தெரிவித்துக் கொள்கின்றேன். அரசாங்கம் முன்னெடுத்துள்ள 10 நாட்கள் முடக்கத்திற்கு நாம் முழுமையாக ஒத்துழைப்பை வழங்கியுள்ளோம். இதற்கு இன்னொரு பக்கமும் உள்ளது.

பொருளாதார பாதிப்பு பற்றியும் சிந்திக்க வேண்டும். எவ்வாறிருப்பினும் முடக்கத்தினால் ஏற்படக் கூடிய பாதிப்புக்களை விட முடக்கம் இன்மையால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் அதிகமாகும்.

எனவே இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்கு உடனடியாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும். அதனுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து பொருளாதாரத்திற்கான ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

இது வரையில் எமக்கு 72 கோடி டொலர் கொவிட் தொற்று கட்டுப்படுத்தல் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட்டுள்ளது. எனவே நாம் வைத்திய ஆலோசனைக்கு அமைய செயற்படுவோம் என்று ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் கோருகின்றேன்.

வைத்திய ஆலோசனைக்கமைய மேலும் இரு வாரங்கள் நாட்டை முடக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுங்கள். அதற்கு சகலரதும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்படும் என்று நான் கருதுகின்றேன் என்றார்.

http://Facebook page / easy 24 news

Previous Post

30ஆம் திகதிக்குப் பின் ஊரடங்கு நீடிக்கப்படாது! ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர்

Next Post

2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறாதோருக்கான அறிவிப்பு

Next Post
2 ஆயிரம் ரூபா நிவாரணம் வழங்க நடவடிக்கை

2 ஆயிரம் ரூபா கொடுப்பனவு பெறாதோருக்கான அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

அரசு எனது கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிச் செல்கிறது | சாணக்கியன்

துறைமுக நகரம் : அரசுக்கு வருமானமா? மக்களுக்கு வேலைவாய்ப்பா? அல்லது நாமலின் விளையாட்டு மைதானமா? – சபையில்  சாணக்கியன் 

July 11, 2026
வலி.வடக்கில் காணி விடுவிப்புக் கோரி 10ஆவது நாளாக தொடரும் போராட்டம்!

தமது காணிகளை விடுவிக்குமாறு காணி உரிமையாளர்கள் மயிலிட்டியில் போராட்டம்

July 11, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதியின் அவதூறு வழக்கு! நீதிமன்றின் உத்தரவு

July 10, 2026
யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை! சிக்கிய ஆபத்தான கும்பல்

July 10, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures