Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் சிறுபான்மையினர் ஆபத்தில்!

November 21, 2018
in News, Politics, World
0
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளைச் சந்தித்துள்ளனர்.
தற்போதைய அரசியல் நெருக்கடிகள் தொடர்பாகவும், இது தொடர்பான தமது நிலைப்பாடு குறித்தும் கூட்டமைப்பு உறுப்பினர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பித்த இந்தச் சந்திப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்தச் சந்திப்பின் போது, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு விரைவான தீர்வைக் காண்பதன் அவசியத்தை இரா.சம்பந்தன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
கடந்த ஒக்ரோபர் 26ஆம் நாளுக்குப் பின்னரான நிலைமைகளை எடுத்துக் கூறிய இரா.சம்பந்தன், இதனால் தமிழ் மக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் குறித்தும் விளக்கமளித்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் விளக்கமளித்த இரா.சம்பந்தன்,
”ஒன்றுக்கு இரண்டு முறை நாடாளுமன்றத்தில் 122 உறுப்பினர்கள், நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்றிய போதும், பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ச தொடர்ந்தும் அதிகாரத்தில் இருக்கிறார்.
அமைச்சர் பதவி, பணம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்து கொண்டிருக்கிறது.
புதிய அரசியலமைப்பைக் கொண்டு வருவது, மற்றும் வடக்கு, கிழக்கில் காணிகள் விடுவிப்பு, அரசியல் கைதிகளின் விடுதலை,உள்ளிட்ட விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியிருந்தோம்.
தற்போதைய அரசியல் நிலைமை சிறுபான்மையினரையும் நாட்டையும் பெரும் ஆபத்தில் தள்ளியிருக்கிறது
இந்த நிலைமைகள் தொடர்ந்தால், சட்டம் ஒழுங்கு நிலைமை வீழ்ச்சிகாணும். அதனால், சமூக விரோத சக்திகளின் கை ஓங்கும்.
நாட்டில் சட்டம், ஒழுங்கு நிலை பாதிக்கப்பட்டால், குறிப்பாக சிறுபான்மையினரே மிகவும் பாதிக்கப்படுவார்கள்.” என்று வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம் கூறியதாக தெரிவித்தார்.
அதற்கு அவர்கள், தம்மால் எதனைச் செய்ய முடியுமோ அதனைச் செய்வதாக உறுதியளித்தனர் என்றும் கூறினார்.
இந்தச் சந்திப்பின் போது, வெளிநாட்டு இராஜதந்திரிகள், தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில், அவுஸ்ரேலியா, நோர்வே, சுவிஸ், கனடா, ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா ஆகியவற்றின் தூதுவர்களும், அமெரிக்கா, பிரித்தானியா, தென்கொரியா, இந்தியா, பங்களாதேஷ், ஜேர்மனி, பிரான்ஸ், தென்னாபிரிக்கா, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் தூதரகங்களின் உயர்மட்டப் பிரதிநிதிகளும், கலந்து கொண்டனர்.
Previous Post

மஹிந்த – மைத்திரிக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

Next Post

மகனை கடித்து குதறிய தந்தை யாழ் .இணுவிலில் சம்பவம்

Next Post

மகனை கடித்து குதறிய தந்தை யாழ் .இணுவிலில் சம்பவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026

Recent News

இலங்கையில் அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை

June 17, 2026
சம்பூர் மனித எச்சங்கள் வழக்கு ; உத்தேச பட்ஜெட் அனுமதி இல்லாததால் வழக்கு மீள அழைப்பு

யோஷித ராஜபக்‌ஷவுக்குப் பிணை 

June 17, 2026
புலிகளின் ஆயுதங்களை கடத்தி நடுகடலில் விரோதிகளுக்கு கைமாற்றிய கோட்டாபய!

கோட்டாபய கைது நிலை! நீதிமன்றத்தில் கோட்டா ரிட் தஞ்சம்!

June 17, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures