சுற்றுலா நோக்கங்களுக்காக மாலைதீவுக்குச் செல்லும் இலங்கை குடிமக்களுக்கு 90 நாள் இலவச வருகை விசாக்களை வழங்க மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் மாலைதீவு பயணத்துடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதன்படி, இந்த விசாக்கள் வழங்குவது நேற்று (29) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
விசா பெறுவதற்கான தகுதி
இந்த விசாக்களைப் பெற, செல்லுபடியாகும் கடவுச்சீட்டை வைத்திருப்பது மற்றும் மாலைத்தீவில் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதி உள்ளது என்பதை நிரூபிப்பது மட்டுமே அவசியம் என தெரிவிக்கப்படுகிறது.

மாலைத்தீவு மற்றும் இலங்கைக்கு இடையிலான விசா வசதி வழங்குதல் தொடர்பான ஒப்பந்தத்தின் விதிகள் மற்றும் மாலைதீவின் குடியேற்றச் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை நோக்கமாகக் கொண்டு இந்த விசா வசதி வழங்கப்படுவதாக மாலைதீவு அரசாங்கம் தெரிவித்துள்ளது.