Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு

September 23, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராக ம.சசிகுமார் பதவியேற்பு

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் சபைக் கூட்டத்தில் சங்கத்தின் பொதுச் செயலாளராக யாழ்ப்பாணம் நீர்வேலியைச் சேர்ந்த ம.சசிகுமார் தெரிவு செய்யப்பட்டதோடு, தலைவராக மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த சி.சசிகுமார் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

அதேவேளை சங்கத்தின் நிதிச் செயலாளராக வடமராட்சியைச் சேர்ந்த கி. இந்திரனும் தெரிவு செய்யப்பட்டதோடு, துணைத்தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த இரா.சச்சிதானந்தம், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. அன்ரன் சேவியர், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த  சசிகலா ஜெயராஜன், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த அமலராஜ் புனிதசீலி ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த  செ. சிவநடேஸ், தீவக வலயத்தைச் சேர்ந்த த. தயாபரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஈ.என்.ஜே.ஜே.  பிகிறாடோ ஆகியோரும், துணை நிதிச் செயலாளர்களாக அம்பாறையைச் சேர்ந்த க. சந்திரகாசன், மட்டக்களப்பைச் சேர்ந்த சுந்தரலிங்கம் உமாபிரியா ஆகியோரும், கல்வி கலாச்சார செயலாளராக தென்மராட்சி வலய நா. கேதீஸ்வரனும் பத்திரிகைச் செயலாளராக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தெ.சுதர்சனும், பிரசார செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த அ. பாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டு சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

தொடர்ந்து சங்கத்தின் ஆலோசகர்களான க.நல்லதம்பி மற்றும் சரா. புவனேஸ்வரன்  சிறப்புரைகள் இடம்பெற்றன. 

அடுத்து சங்கத்தின் பணிகளை செம்மையாக மேற்கொண்டு ஓய்வுபெற்ற உறுப்பினர்கள், பணிமேலோங்கி பதவி உயர்வு பெற்ற உறுப்பினர்களுக்குமான கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இக்கௌரவிப்பில் முனைநாள் துணைத் தலைவர் செல்வி. வளர்மதி சங்கரலிங்கம், முன்னைநாள் மன்னார் மாவட்டச் செயலாளர் மரியான் ஜெரார்ட் டயஸ் , முன்னைநாள் பதில் பொதுச் செயலாளரும்  பிரதிக் கல்விப் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்ற  பி.என். சுதர்சன், முன்னைநாள் பதில் பொதுச் செயலாளரும் விரிவுரையாளராக பதவி உயர்வு பெற்ற செ. சிவபாலசுந்தர் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.  

தொடர்ந்து புதிய தாய்ச்சங்க நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

அதன்படி தலைவராக மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த சி.சசிதரனும், பொதுச் செயலாளராக யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த ம. சசிகுமாரும், நிதிச் செயலாளராக வடமராட்சியைச் சேர்ந்த கி. இந்திரனும் தெரிவு செய்யப்பட்டதோடு துணைத்தலைவர்களாக திருகோணமலையைச் சேர்ந்த இரா.சச்சிதானந்தம், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஏ. அன்ரன் சேவியர், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த சசிகலா ஜெயராஜன், யாழ்ப்பாண வலயத்தைச் சேர்ந்த அ. புனிதசீலி ஆகியோரும், துணைப் பொதுச் செயலாளர்களாக மட்டக்களப்பைச் சேர்ந்த செ. சிவநடேஸ், தீவக வலயத்தைச் த. தயாபரன், மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த  ஈ.என்.ஜே.ஜே.  பிகிறாடோ ஆகியோரும், துணை நிதிச் செயலாளர்களாக அம்பாறையைச் சேர்ந்த க. சந்திரகாசன், மட்டக்களப்பைச் சேர்ந்த சுந்தரலிங்கம் உமாபிரியா ஆகியோரும், கல்வி கலாச்சார செயலாளராக தென்மராட்சி வலய நா. கேதீஸ்வரனும் பத்திரிகைச் செயலாளராக புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்த தெ. சுதர்சனும், பிரசாரப் செயலாளராக மலையகத்தைச் சேர்ந்த அ. பாலசிங்கமும் தெரிவு செய்யப்பட்டு சபை ஏகமனதாக ஏற்கொண்டது.

கிழக்கு மாகாணச் செயலாளராக த. ஹரிகாலனும் வட மாகாணச் செயலாளராக வி. ஜெயரூபனும், ஏனைய மாகாணங்களுக்கான செயலாளர்களும், மாவட்டச் செயலாளர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

சங்கத்தின் ஆலோசகர்களாக ஈ.ஜெ. மகேந்திரா, க. நல்லதம்பி, சரா. புவனேஸ்வரன் ஆகியோர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலாக பொதுச் சபையின் அங்கீகாரத்தோடு ஒன்பது பேர் கொண்ட ஆலோசனைச் சபையும் உருவாக்கப்பட்டது.

அதில் சங்கத்தின் ஆலோசகர்கள் உள்ளடங்கலாக யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் நவநீதகிருஷ்ணன் கெங்காதரன், முன்னைநாள் துணைப் பொதுச் செயலாளரும் பிரதிக் கல்விப் பணிப்பாளருமான பொ. அருணகிரிநாதன், முன்னாள் கல்விப் பணிப்பாளர் யோ. ரவீந்திரன், பிரதிக் கல்விப் பணிப்பாளர் பி.என். சுதர்ஷன்,  விரிவுரையாளர் செ. சிவபாலசுந்தர், முன்னாள் மன்னார் மாவட்டச் செயலாளர் மரியான் ஜெரால்ட் டயஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

Previous Post

சர்வதேச வர்த்தக நிகழ்வுகளுக்கு இலங்கை ஒரு தனித்துவமான தளம் – பிரதமர்

Next Post

யதார்த்த நாயகன் விதார்த் விவசாயியாக நடிக்கும் ‘மருதம்’

Next Post
யதார்த்த நாயகன் விதார்த் விவசாயியாக நடிக்கும் ‘மருதம்’

யதார்த்த நாயகன் விதார்த் விவசாயியாக நடிக்கும் 'மருதம்'

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures