Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இராணுவத்தினரிடமிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் கையளிப்பு

December 19, 2018
in News, Politics, World
0

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தின் கட்டுப்பாட்டிலிருந்த 45 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபர்களிடம் இன்று (புதன்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் கிளிநாச்சி நகரிலுள்ள காமினி சென்டர் மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி- கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு- துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள தனியார் காணிகளே இவ்வாறு படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்ணளவாக 40 ஏக்கர் காணிகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அண்ணளவாக 5 ஏக்கர் காணிகளும் படையினரால் இன்று விடுவிக்கப்பட்டு தம்மிடம் கையளித்துள்ளதாகவும், பிரதேச செயலளர்கள் ஊடாக காணிகள் அடையாளம் காணப்பட்டு மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

வடக்கில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இன்று விடுவிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய  மாவட்டங்களில் படையினர் வசமிருந்த 45 ஏக்கர் காணிகள் இன்று (புதன்கிழமை) விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி- ஹாமினி நிலையத்தில் தற்போது நடைபெற்றுகொண்டு இருக்கின்றது.

இதன்படி கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள கராச்சி மற்றும் கண்டாவலை பிரதேச செயலகத்திலுள்ள 40 ஏக்கர் காணிகளையும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள துணுக்காய் மற்றும் குடியிருப்பு பிரதேச செயலகத்திலுள்ள 5 ஏக்கர் காணிகளையும் இன்று விடுவிக்கவுள்ளனர்.

குறித்த நிகழ்வில் இராணுவத்தின் மேஜர் ஜெனரல் ரால்ப் நுகேரா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமை நாயகம், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி ஜெகதீஸ்வரன், கரைச்சி கண்டாவளை பிரதேச உறுப்பினர்கள், இராணுவத்தின் உயர் அதிகாரிகளென பலர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

Next Post

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யாழ். குடும்பம்

Next Post

உலகளாவிய ரீதியில் பிரபல்யமான சிறுமிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த யாழ். குடும்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures