இரட்டக் குடியுரிமை பெற்றவர்கள் கனேடிய கடவுச் சீட்டையே பயன்படுத்த வேண்டும் !

இரட்டக் குடியுரிமை பெற்றவர்கள் கனேடிய கடவுச் சீட்டையே பயன்படுத்த வேண்டும் !

இந்தக் கொள்கை மாற்றம் எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் பரிசோதனை முறையின் ஒரு பகுதியாகும்.

இரட்டைக் குடியுரிமை பெற்ற கனேடியர்கள் கனடாவிற்குள் பிரவேசிக்கும் போது கனேடிய கடவுச்சீட்டையே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விரைவில் அமுலுக்கு வரவுள்ளது. இது இரட்டைக் குடியுரிமையை கொண்டிருக்கும் ஏறத்தாழ 1 மில்லியன் கனேடியர்களுக்கு ஆச்சரியமக அமையும்.

கனேடிய அரச இணையத்தளம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலில் படி செப்டெம்பர் 30 இலிருந்து கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் அவர்களது விமானப் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னரே தேவையான தேவையான சகல ஆவணங்களையும் தம் வசம் வைத்திருக்க வேண்டும் என்று கேட்கப்படுவர். இது கனேடியர்களுக்கும், இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கும் பொருந்தும்.

கனேடிய கடவுச் சீட்டு, தற்காலிக கேடிய கடவுச் சீட்டு அல்லது கனேடிய அவசர பயண ஆவணம் போன்றவை இல்லாதவர்கள் விமானங்களில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று அந்த அரச இணையத்தளம் மேலும் தெரிவிக்கின்றது. இந்தக் கொள்கை மாற்றம் எல்லை பாதுகாப்பை அதிகரிக்கும் முகமாக மேற்கொள்ளப்படும் இலத்திரனியல் பரிசோதனை முறையின் ஒரு பகுதியாகும்.

கனடாவின் 2011 ஆம் ஆண்டின் சனத்தொகை கணக்கெடுப்பின் படி 2.9% ஆனவர்கள் (944, 700 பேர்கள் ) இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் மிக அதிகமானோர் அமெரிக்க குடியுரிமை உடையவர்களும் அதற்கடுத்ததாக ஐக்கிய இராச்சியம், பின்லாந்து, போலந்து ஆகிய நாட்டுக் குடியுரிமை உடையவர்களும் உள்ளனர்.

இந்தப் புதிய நாய்முறை ஆகாய மார்க்கமாக கண்டாவிற்குள் பிரவேசிப்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News