ராஜா கஜினி இயக்கி, தயாரிக்க, ரோஷன் – ஹிரோஷிணி கோமளி நடிக்கும் படம், உற்றான். படம் குறித்து, செய்தியாளர் சந்திப்பின் போது, ஹிரோஷிணி கோமளியிடம், ‘படத்தின், ‘க்ளைமாக்ஸ்’ என்ன?’ என கேட்டதற்கு, ”படத்திற்கு, இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு உள்ளன. எதை வைப்பர் என்று தெரியவில்லை,” என்றார்.
இதைக் கேட்டு அதிர்ந்த, இயக்குனர் ராஜா கஜினி, ”இப்படத்தில், ஒரு க்ளைமாக்ஸ் காட்சி தான் எடுத்திருக்கிறோம்; அதை சொல்லக்கூடாது என்பதற்காக, ஹிரோஷிணி இப்படி கூறி விட்டார்,” என்றார்.