இயக்குநரும், பிரபல நடிகருமான சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் ‘லேடிஸ் ஹாஸ்டல்’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையின் சிறப்பாக நடைபெற்றது.
இயக்குநர் தயாநிதி பாரதி மோகன் இயக்கத்தில் உருவாகும் ‘லேடிஸ் ஹாஸ்டல் ‘எனும் திரைப்படத்தில் அசோக், ராதா ரவி, நிழல்கள் ரவி, ரேகா, அப்புகுட்டி, சிங்கம் புலி, ரியாஸ் கான், மதுமிதா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் இயக்குநரும், நடிகருமான சேரன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை மரியம் பிக்சர்ஸ் மற்றும் சன்ஷைன் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் மரியா சுவானி – பாரதி மோகன்- ஆறுமுக இளங்கண்ணன் -வின்சென்ட் அமலதாஸ் -டேனியல் லென்டில்- ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தமிழ் ,தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதன் இந்நிகழ்வில் இயக்குநர்கள் பேரரசு- மனோஜ் குமார்- அரவிந்தராஜ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.