இம்மாதம் முதல் கனடாவின் புதிய கடவுச்சீட்டு தேவைகள் அமுலிற்கு வருகின்றது.

இம்மாதம் முதல் கனடாவின் புதிய கடவுச்சீட்டு தேவைகள் அமுலிற்கு வருகின்றது.

கனடாவின்  கடவுச்சீட்டு புதிய தேவைகள் இம்மாத இறுதியில் அமுலுக்கு வருகின்றது. இதன் பிரகாரம் இரட்டை குடியுரிமை வைத்திருக்கும் கனடியர்கள் வான் பயணத்தை மேற்கொள்ளும் போது கச்சிதமான கனடிய கடவுச்சீட்டை வைத்திருக்க வேண்டுமென வற்புறுத்துகின்றது.
செப்டம்பர் 30-லிருந்து விமான பயணிகள் அனைவரும் கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் தங்களது புறப்படும் விமானத்தில் ஏற முன்பு சரியான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என கூறப்படுகின்றது.
ஒரு சரியான கனடிய கடவுச்சீட்டு மட்டுமே நம்பகமான மற்றும் உலகம் முழுவதிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பயண ஆவணமாகும். அத்துடன் நாம் ஒரு குடிமகன் என்பதற்கு ஆதாரமாகும்.கனடாவிற்குள் நுழைவதற்கு எந்த வித குடியேற்ற திரையிடலுமின்றி அனுமதிக்க கூடியது என கனடிய அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரட்டை குடியுரிமை கொண்ட மக்களை நேர்த்தகவுடைய கனடிய கடவுச்சீட்டுக்களை வைத்திருக்குமாறு கனடிய அரசாங்கம் ஊக்குவிக்கின்றது.
செப்டம்பர் 29-வரை தெரியாமல் பயணம் செய்பவர்களிற்கு கருணை காட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றங்களிற்கு முன்னர் இரட்டை குடியுரிமை கனடியர்கள் தங்கள் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் அல்லது குடியுரிமையை காண்பித்து கனடிய குடியுரிமையை நிரூபிக்கலாம். ஆனால் மாற்றத்தின் பின்னர் சகல பயணிகளும் கட்டாயம் சரியான கனடிய கடவுச்சீட்டு, தற்காலிக கனடிய கடவுச்சீட்டு அல்லது அவசரகால பயண ஆவணம்–கனடியர் என உறுதிப்படுத்த- வைத்திருக்க வேண்டும்.
புதிய தேவைகள் வான் பயணங்களிற்கு மட்டுமே.
அமெரிக்க குடிமக்கள் மற்றும் அமெரிக்க-கனடிய குடிமக்கள்; சரியான யு.எஸ் .கடவுச்சீட்டுடன் விமான பயணம் மேற்கொள்ளலாம்.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News