Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன ரீதியான பாடசாலைகளை ஒழித்தால் இன முரண்பாடு ஒழியும் என்று உறுதிப்படுத்த முடியாது.

September 6, 2018
in News, Politics, World
0

இன ரீதியான பாடசாலைகள் இருக்கவேண்டுமா, இல்லையா என்ற பிரச்சினைகள் இப்போது ஆரம்பித்துள்ளன. ஆனால், ஒரு பாடசாலையில் இன ரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அதில் ஏனைய இன மாணவர்களும் கற்கக்கூடிய சூழலை உருவாக்குவதுதான் காலத்தின் தேவையாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கொழும்பு பதியுதீன் மஹ்மூத் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட முகப்பை இன்று (05) புதன்கிழமை திறந்துவைத்த பின்னர் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;

இன முரண்பாடுகளை இல்லாதொழிக்கும் வகையில் சபாநாயகர் கரு ஜயசூரிய நாளை வியாழக்கிழமை (06) தெரிவுக்குழு ஒன்றை அமைக்கவுள்ளார். இன ரீதியான பாடசாலைகளை இல்லாதொழித்தால், இன முரண்பாடுகள் குறையும் என்று பேசப்படுகிறது. ஆனால், இதை ஆராய்ந்துதான் செய்யவேண்டும்.

இன ரீதியான பாடசாலைகளை இல்லாமல் செய்வதன்மூலம், இனங்களுக்கிடையிலான முரண்பாடுகள் ஒழிந்துவிடும் அல்லது இல்லாமல்போய்விடும் என்று எதிர்பார்க்க முடியாது. இதற்கு நேரடி செல்வாக்கு செலுத்தக்கூடிய வேறு காரணங்களும் இருக்கலாம்.

ஒரு பாடசாலைகளுக்கு இனரீதியான தனித்துவ அடையாளம் இருந்தாலும், அங்கு ஏனைய இன மாணவர்களும் கல்வி கற்கக்கூடிய சூழலை உருவாக்கவேண்டும். அவ்வாறு செய்வதன்மூலம்தான் இனங்களுக்கிடையில் பரஸ்பரம், புரிந்துணர்வை வளர்க்கமுடியும் என்றார்.

பாடசாலை அதிபர் சித்தீக்கா ஹுஸைன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் அனஸ், மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் ரியாஸ் கபூர், பாடசாலையின் பழைய மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Previous Post

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட மாணவனை அமைச்சருடன் தொடர்புபடுத்தி தவறான பிரசாரம்

Next Post

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலரைக் காணவில்லை; நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு

Next Post

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலரைக் காணவில்லை; நிலச்சரிவுகள், மின்சாரம் துண்டிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

விம்பின்டன் ஒற்றையர் சம்பியன் பட்டங்களை லிண்டா, சின்னர் ஆகியோர் சுவீகரித்தனர்

July 13, 2026
தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

தமிழ் பேசும் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்பட இணக்கப்பாடு

July 13, 2026
புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

புதுக்குடியிருப்பில் கலப்பட மிளகாய்த்தூள் விற்பனை : வியாபாரிக்கு அபராதம்!

July 13, 2026
தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2” போராட்டம் ஆகஸ்ட் 14 ஆரம்பம் 

July 13, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures