Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

February 22, 2026
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
இனோக்காவின் சிறந்த பந்துவீச்சு உதவியுடன் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது இலங்கை

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக கிரெனடா, சென் ஜோர்ஜ் தேசிய கிரிக்கெட் விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (20)  நடைபெற்ற முதலாவது மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இனோக்கா ரணவீரவின் அபார பந்துவீச்சின் உதவியடன் இலங்கை 10 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இலங்கை 1 – 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.

ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

சமரி அத்தப்பத்து (27),  ஹாசினி பெரேரா ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

சமரி அத்தப்பத்து ஆட்டம் இழந்த பின்னர் ஹாசினி பெரேரா, ஹர்ஷனி சமரவிக்ரம ஆகிய இருவரும் 86 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஹாசினி பெரெரா 61 ஓட்டங்களைப் பெற்றார்.

தொடர்ந்து ஹர்ஷித்தா சமரவிக்ரம, நிலக்ஷிக்கா சில்வா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் மேலும் 50 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

ஹர்ஷித்தா சமரவிக்ரம மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 66 ஓட்டங்களைப் பெற்றதுடன் நிலக்ஷிக்கா சில்வா 22 ஓட்டங்களைப் பெற்றார்.

மத்திய வரிசையில் கவிஷா டில்ஹாரி (22), விஷ்மி குணரட்ன (16 ஆ.இ.), தெவ்மி விஹங்கா (14 ஆ.இ.) ஆகியோரும் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர்.

பந்துவீச்சில் ஹேலி மெத்யூஸ் 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கரிஷ்மா ராமாரெக் 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

241 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இலங்கையின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்வதில் சிரமம் அடைந்த மேற்கிந்தியத் தீவுக்ள 23ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

எனினும் ஸ்டெபானி டெய்லர் (66), ஜன்னிலி க்ளாஸ்கோ (50) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் 89 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறப்பான நிலையில் இட்டனர். (169 – 6 விக்.)

அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்த்தப்பட்டன.

ஆலியா அலின் 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகி: இனோக்கா பெரேரா.

Previous Post

உலக நாயகன் – சுப்பர் ஸ்டார் இணையும் படத்தின் அறிமுக காணொளி வெளியீடு

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures