Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய அழகிப் போட்டியில் கலக்கிய அரசியல்வாதி யார் தெரியுமா?

January 12, 2018
in News, Politics, World
0

பிரதமர் மோடி, இள வயதில் டீ விற்றதாகச் சொல்வர். பிரதமர் முதல் லேட்டஸ்டாக அரசியலில் குதித்துள்ள ரஜினிகாந்த் வரை பலரும் எளிய பின்னணி கொண்டவர்களே. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கொல்கத்தாவில் டெபுடி அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் சாதாரண கிளார்க்காக வாழ்க்கையைத் தொடங்கியவர். பேராசிரியராகப் பகுதி நேரப் பத்திரிகையாளராகவும்கூட பணிபுரிந்த அவர், அரசியலில் புகுந்து காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தூண்களில் ஒருவரானார். நிதியமைச்சராகப் பதவி வகித்த அவர், 2012-ம் ஆண்டு நாட்டின் உயரிய பதவியான குடியரசுத் தலைவர் பதவியை அலங்கரித்தார். தற்போதையக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கான்பூரில் சட்டம் பயின்றவர். சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி மூன்றாவது முயற்சியில் தேர்வுபெற்றவர்தான். குடியரசு முன்னாள் தலைவர் ஹமீத் அன்சாரி, இந்திய வெளியுறவுத்துறையில் பணிபுரிந்தவர்.

காங்கிரஸ் தலைவராக 19 ஆண்டுகாலம் பதவி வகித்த சோனியா காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ரெஸ்ட்டாரண்ட் ஒன்றில் வெயிட்ரஸாகப் பணிபுரிந்தவர். இத்தாலியின் விஸின்சியா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்த சோனியா காந்தி, ரெஸ்டரான்டில்தான் ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். ராஜீவ் கொல்லப்பட்ட பிறகு, 1998-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சித் தலைவர் ஆனார்.

இந்திய அரசியல்வாதிகளில் ராகுல் காந்தி பணக்காரக் குடும்பத்தின் பின்னணியைக் கொண்டிருந்தாலும் அவரும் எளிமையாகவே வாழ்க்கையைத் தொடங்கியவரே… லண்டனில் உள்ள மேனேஜ்மென்ட் கன்சல்டன்சி நிறுவனமான மானிட்டர் குழுமத்தில் சில காலம் பணிபுரிந்தார். பிறகு, மும்பையில் பேக்கப் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார். 2013 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, சமீபத்தில்தான் அந்தக் கட்சியின் தலைவராக உயர்ந்துள்ளார்.

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் சட்டம் பயின்ற பிறகு, கலிங்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். மம்தா மிகச்சிறந்த கவிஞரும்கூட. ஓவியமும் வரைவார். மம்தா 15 வயதிலிருந்தே அரசியலில் ஈடுபட்டவர் என்பது கூடுதல் தகவல். மத்திய அமைச்சர் ஸ்ம்ரிதி இரானி, இந்திய அழகிப் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியவர். 1998-ம் ஆண்டு இந்திய அழகிப் போட்டியில் பங்கேற்ற அவர், இறுதிச்சுற்றில் தோல்வியடைந்தார். பிறகு, தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ்பெற்றார். தொலைக்காட்சிப் பிரபலமாக அரசியலுக்குள் நுழைந்து, தற்போது டெக்ஸ்டைல் துறை அமைச்சராக உயர்ந்திருக்கிறார்.

அதிரடிக்கு பெயர்போன மாயாவதி, ஆசிரியையாகப் பணிபுரிந்தவர். இவருக்கு ஐ.ஏ.எஸ் ஆவதுதான் இலக்கு. 1977-ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் கன்சிராம், இவரின் வீட்டுக்கு விசிட் செய்தார். மாயாவதியின் திறமை, கல்வியறிவு கன்சிராமைக் கவர, மாயாவதி அரசியலுக்குள் நுழைந்தார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சித் தலைவராக உள்ள மாயாவதி, உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராக இருந்துள்ளார்.

வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், சமஸ்கிருதம் மற்றும் அரசியலில் பட்டம் பெற்றவர். சட்டம் பயின்று 1973 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றார். 2014-ம் ஆண்டு வெளியுறவுத் துறை அமைச்சரானார் சுஷ்மா. லாலுவும் மிக எளிமையாகவே அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர்தான். பீகார் கால்நடை மருத்துவக் கல்லூரியில் அலுவலக ஊழியராகப் பணியைத் தொடங்கியவர். பிற்காலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவராகி, பீகார் மாநில முதலமைச்சராக 1990 முதல் 97-ம் ஆண்டு வரை பதவிவகித்தார். 2004 ஆம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் லாலு.

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சசி தரூர், 1975 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள The Fletcher School of Law and Diplomacy பல்கலையில் சட்டம் பயின்றார். 1978 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்தில் பணியைத் தொடங்கினார். சிங்கப்பூரிலும் ஐ.நா-வில் பணிபுரிந்துள்ளார். பால்தாக்கரே கார்ட்டூனிஸ்ட். அரவிந்த் கெஜ்ரிவால் அரசு ஊழியர். அமித்ஷா பங்குசந்தை புரோக்கர். மன்மோகன்சிங் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். நிதிஷ்குமார் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, பீகார் மின்வாரியத்தில் பணி புரிந்தவர்.

Previous Post

‘ஹிட்’ அடிக்குமா?

Next Post

வைரமுத்துவால் இந்து எழுச்சி : எச்.ராஜா பேச்சு

Next Post

வைரமுத்துவால் இந்து எழுச்சி : எச்.ராஜா பேச்சு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026

Recent News

மித்தெனிய ஐஸ் போதைப் பொருள் விவகாரத்தில் நாமல் – ஜோன்ஸ்டனுக்கு தொடர்பு

நாமல் ராஜபக்‌ஷ இந்தியா விஜயம் 

July 21, 2026
போதைப்பொருள் உட்கொண்டு வாகனங்களை செலுத்திய 790 சாரதிகள் கைது

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டம் ; 795 சந்தேகநபர்கள் கைது!

July 21, 2026
பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

பீடி இலைகள் நீர்கொழும்பில் கைப்பற்றல்

July 21, 2026
திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

திருகோணமலை கின்னியா வெந்நீர் ஊற்று தொல்லியல் பகுதியில் சேதமடைந்த சைத்தியம் மீளமைப்பு நாளை ஆரம்பம்!

July 21, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures