தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த சிலாபம் நீதவான் நீதிமன்றம் காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜெகத் சமந்தவின் வீட்டிற்கு சேதம் விளைவித்தமை தொடர்பாக சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (24) அழைக்கப்பட்டபோது அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை.
காரணம்
எனினும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் நேற்று(24) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதால் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவிப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.