மலையாள சினிமாவை பொறுத்தவரை பெரும்பாலான நடிகைகள் தங்களது திருமணத்திற்குப்பின் நடிக்க வருவதில்லை. ஆனால் நடிகை சம்விருதா சுனில் மட்டும் இதில் விதிவிலக்காக கணவரின் சம்மதத்துடன் ஆறு வருடங்கள் கழித்து நடிக்க வந்துள்ளார்.
தமிழில் பரபரப்பை கிளப்பிய, இயக்குனர் சாமி இயக்கிய உயிர் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடித்தவர் தான் இந்த சம்விருதா. தற்போது ஒரு வடக்கன் செல்பி இயக்குனர் பிரஜித் இயக்கிவரும் புதிய படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சம்விருதா சுனில். இந்தப்படத்திற்காக வெறும் 15 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.