நடிகர் சிம்பு ஆங்கிலத்தில் புதிய படம் ஒன்றை இயக்க முடிவு செய்திருக்கிறார். புதுப்படம் குறித்து சில தகவல்களை அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
தான் இயக்கவிருக்கும் புதிய படம் ஆங்கிலத்தில் மட்டுமே உருவாகிறது என்று கூறியிருந்தார்.
இப்படம் தமிழ் மற்றும் சில முக்கிய மொழிகளில் டப் செய்யப்பட உள்ளதாகவும் சிம்பு கூறியிருந்தார். இந்நிலையில் படத்தின் திரைக்கதையை சிம்பு எழுதி முடித்திருப்பதால், அக்டோபரில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் முடிகிறது. இந்த படத்திற்கு இயக்குநர் கவுதம் மேனன் வசனங்களை எழுதுகிறார்.
மேலும் சந்தோஷ் சிவன் சிம்பு படத்தில் இணைய உள்ளார். இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
இந்த படத்தில் பாடல்கள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.











