விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு அஜித், பிங்க் படத்தின் ரீ-மேக்கில் நடிக்கிறார். வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடக்கிறது.
சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படம் அறிவிக்கப்பட்டபோதே மே 1 ரிலீஸ் என்றே அறிவித்தார்கள்.
ஆனால், படப்பிடிப்பு ஏப்ரல் வரை தொடரும் என தெரிகிறது. இதன் காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிப்போகலாம் என ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் இப்போது, ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

