குயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார்.
தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார்.
குக்டவுனிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவில் உள்ள அய்டனில் படகு சென்றவேளை முதலை அந்த நபரின் காலை கடித்ததுடன் நாயை இழுத்துச்சென்றுள்ளது.
குறிப்பிட்ட நபரின் காலில் கடும்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஹெலிக்கொப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவரின் உடல்நிலை சீராக உள்ளது ஆனால் நாய்க்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை