அவுஸ்திரேலியாவின் தொலைதொடர்பு ஜாம்பவான்கள் என அழைக்கப்படும் ஒப்டஸ் நிறுவனத்தின் வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் இணைய வசதிகளை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.
10 மில்லியன் வாடிக்கையாளர்களையும் ஆயிரக்கணக்கான வர்த்தகங்களையும் கொண்டுள்ள ஒப்டஸ் நிறுவனத்தின் வலையைமைப்பில் கோளாறு ஏற்பட்டது.
இதன் காரணமாக போக்குவரத்து தாமதங்கள் மருத்துவமனைகளில் தொலைபேசி சேவைகள் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்கள் கட்டணங்களை செலுத்துவதற்கான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
வலையமைப்பில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக மக்கள் அவசர அழைப்பு இலங்கங்களை தொடர்புகொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர் விக்டோரியாவில் சில புகையிரசேவைகள் பாதிக்கப்பட்டன சில மருத்துவமனைகளின் சேவைகளும் பாதிக்கப்பட்டன.
தற்போது சில சேவைகளை மீள ஏற்படுத்தியுள்ளதாக ஒப்டஸ் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறினால் தனது தந்தையின் புற்றுநோய் சிகிச்சை குறித்த விபரங்களை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக பெண் ஒருவர் ஏபிசிக்கு தெரிவித்துள்ளார்.