Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிபுணர்வு பலகை

August 13, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
அழிந்துவரும் பறவையினத்துக்காக வேலணையில் நாட்டப்பட்ட விழிபுணர்வு பலகை

இயற்கைக்கான கூட்டிணைவில் சமூக பங்களிப்பை மேம்படுத்தும் நோக்குடன் அழிவின் விளிம்பில் இருக்கு Indian Courser பறவையானத்தை பாதுகாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் ஓர் அங்கமான விழிப்புணர்வு பலகை ஒன்று மண்கும்பான் பிள்ளையாளர் கோவிலுக்கு முன்புறமாக நாட்டப்பட்டது.

Indian Courser பறவையானம் மிகவும் அரிதான, அழிந்துவிடும் ஆபத்தின் விளிம்பில் காணப்படும் பறவையாகும்.

இதேநேரம் இலங்கையில் வடபகுதியான நெடுந்தீவில் மட்டுமே காணப்படுகின்ற Indian Courser எனும் பறவை காணப்படுகின்றது..

இந்நிலையில் அழிவின் விளிம்பில் இருக்கும் குறித்த பறவையை பாதுகாப்பதற்காக சி.சி.எச் நிறுவனம்,  இயற்கை ஊக்குவிப்பு கழகம் மற்றும் Dialog நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து  செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன் குறித்த செயற்றிட்டத்தை முன்னெடுப்பதற்கு நெடுந்தீவு பிரதேச செயலகம், வட மாகாண சுற்றுலா பணியகம், நெடுந்தீவு பிரதேச சபை , வேலணை பிரதேச சபை , நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகம் ஆகியனவும் பெரும் பங்களிப்பை வழங்கிவருகின்றன. 

இந்நிலையிலேயே ஞாயிற்றுக்கிழமை (09) குறித்த பறவையினத்தின் இருப்பை உறுதிசெய்யும் செயற்றிட்டத்தின் விழிப்புணர்வு பலகை வேலணை பிரதேசத்தின்  மண்கும்பான் பகுதியில் கால் நடை மேச்சற்றறைக்காக அடையாளப்படுத்தப்பட்ட அரச நிலத்தில் நாட்டிவைக்கப்பட்டது

குறித்த நிகழ்வில் நெடுந்தீவு பிரதேச செயலர் , வேலணை பிரதேச சபையின் தவிசாளர் ,வேலணை பிரதேச சபை உறுப்பினர் , வேலணை விரதேச சபையின் அதிகாரிகள், Dialog நிறுவன உத்தியோகத்தர்கள், இயற்கை ஊக்குவிப்பு கழக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சிவகார்த்திகேயன் வெளியிட்ட அருண் விஜயின் ‘ரெட்ட தல ‘ பட கிளர்வோட்டம்

Next Post

வடக்கு கிழக்கிற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி | வலியுறுத்தி திரியாயில் போராட்டம்

Next Post
வடக்கு கிழக்கிற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி | வலியுறுத்தி திரியாயில் போராட்டம்

வடக்கு கிழக்கிற்கு மீளப்பெற முடியாத அதிகார பகிர்வுடன் கூடிய சமஸ்டி | வலியுறுத்தி திரியாயில் போராட்டம்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures